மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்

205
©AFP

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (22) லீட்ஸ் – ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் என்பதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர்

ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் மூளையில் அதிர்வு…

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18ம் திகதி நிறைவுக்கு வந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியானது வெற்றித் தோல்வியின்றி நிறைவுபெற்றது.

குறித்த போட்டியின் போது, அதிகமாக பேசப்பட்ட விடயம் ஸ்டீவ் ஸ்மித்தின் உபாதை. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸ்மித் 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பௌண்சர் பந்து அவரது கழுத்து பகுதியை தாக்கியிருந்தது. இதில் நிலைகுழைந்த ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்த வேண்டும் என உபாதையுடன் துடுப்பெடுத்தாடிய இவர், 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் களமிறங்கியிருக்கவில்லை.

அவருக்கு பதிலாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையின் படி, மாற்று வீரராக களமிறங்கிய மார்னஸ் லெபுசெங், ஸ்மித்துக்கு பதிலாக களமிறங்கி, அரைச்சதம் கடந்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

போராட்டங்களின் பின் சமனிலையாகிய ஏஷஸின் இரண்டாவது டெஸ்ட்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் லண்டன் லோர்ட்ஸ்…

இந்நிலையில், இரண்டு போட்டிகளுக்கும் இடையில் மூன்று நாட்கள் மாத்திரமே இடைவெளி இருப்பதால், உளவியல் ரீதியில் ஸ்மித் விளையாடுவது கடினம் எனக்கூறி அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மூன்றாவது போட்டியிலிருந்து ஸ்மித்தை நீக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி இந்த மூன்று நாட்களில் ஸ்மித் அணியின் பயிற்சியிலும் இணைந்திருக்கவில்லை.

அடுத்து நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக களமிறங்கிய மார்னஸ் லெபுசெங் அடுத்த போட்டியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<