1980களில் பயன்படுத்திய ஜேர்சிக்கு மாறிய அவுஸ்திரேலியா

559
www.cricket.com.au

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1980-களில் பயன்படுத்தியது போன்ற ஜேர்சியை தற்போது இந்திய தொடரின்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் புதிய தோற்றத்துடன் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.

சொந்த மண்ணில் ஆஸி. அணியை எதிர்கொள்ளவுள்ள இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு T20I …..

அவுஸ்திரேலியாஇந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை (12) சிட்னியில் ஆரம்பமாகிறது. பொதுவாக அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஒரு நாள் போட்டியில் மஞ்சள் நிறத்திலான ஜேர்சியினை அணிந்து விளையாடுவது வழக்கம்.

சமீபகாலமாக அவுஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஜேர்சியை மாற்றியுள்ளது.  

1980-களில் ஆலன் போர்டர் தலைமையிலான அவுஸ்திரேலியா அணிந்திருந்த ஜேர்சியை போன்று தற்போது புதிய ஜேர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1986இல் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆலன் போர்டர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இதே ஜேர்சியை அணிந்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தப் புதிய ஜேர்சி தொடர்பில் அவுஸ்திரேலிய ஒருநாள் அணித் தலைவர் ஆரோன் பின்ச் கருத்து வெளியிடுகையில், “அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணிந்து விளையாடிய ஜேர்சியை ஒத்த வடிவில் மீண்டும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, இந்த ஜேர்சியை அணிந்து விளையாடி அவர்களுக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். எமக்கு இந்த ஜேர்சியை வித்தியாசத்தை கொடுத்துள்ளது. எனவே, இந்த தொடரையும் வெற்றி கொள்வோம்” என தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவுடனான ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானங்களில் இந்த ஜேர்சி விற்பனை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வெள்ளையடிப்புக்கு உள்ளான இலங்கை தொடர்ந்தும் எட்டாமிடத்தில்

இலங்கைக்கு எதிராக 3-0 எனும் அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து ….

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் துடுப்பாட்ட வரிசையில், உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

சகலதுறை வீரர்கள் வரிசையில் கிளென் மெக்ஸ்வெல்லும், மார்க்ஸ் ஸ்டொய்னிஸும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, சுழற்பந்து வீச்சாளர்களில் வழக்கமாக இடம்பெறும் அடம் சம்பாவிற்குப் பதிலாக இம்முறை நதன் லயென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேசன் பென்கிராப்ட், ஜை ரிச்சர்ட்சன் மற்றும் பீட்டர் சிட்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பீட்டர் சிட்டில் 8 வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<