2018 இல் விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்

790

விளையாட்டு உலகில் 2018 ஆம் ஆண்டானது சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 12 மாதங்களில் மெய்வல்லுனர், மோட்டார் பந்தயம், கூடைப்பந்து, கெரம், வலைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஹொக்கி, உடற்கட்டழகர் என பல்வேறு விளையாட்டுகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையை இங்கு பார்க்கலாம்.

ஜனவரி

ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

.

ஆசிய கிண்ணம் வென்ற மங்கைகளை கௌரவித்த ஈவினை சமூகம்

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாகவும் எம்.எப்.எம் பாசில் வென்றார்.

.

.

வருடத்தின் முதலாவது கிரான்ஸ்ட்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சம்பியன் பட்டத்தை ஆறாவது தடவையாகவும் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் வென்றார்.

பெப்ரவரி

தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய டென்னிஸ் வீரரும், இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.

.

ஈரானில் நடைபெற்ற 8 ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.

மார்ச்

23 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்றது.

.

.

பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான நகர்வல ஓட்டப் போட்டித் தொடரில், இலங்கையின் நிலானி ரத்னநாயக்க மற்றும் லயனல் சமரஜீவ ஆகியோர் தனிநபருக்கான போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

.

உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீரர் புஷ்பராஜ்

ஏப்ரல்

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பிராந்தியமான கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது.

.

.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் மிகப் பெரிய குறைபாடாக காணப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் நட்சத்திர வீராங்கனை அனூஷா தில்ருக்‌ஷி வெண்கலப் பதக்கம் வென்று பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் குத்துச்சண்டைப் போட்டிப் பிரிவில் முதலாவது பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

சுமார் 68 வருடங்களுக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி, 39.08 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய தேசிய சாதனையுடன் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மே    

ஆசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான லூசியன் புஷ்பராஜ், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற 9 ஆவது ஆஸ்திரிய சர்வதேச உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

.

உலகின் உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையராக ஜொஹான் பீரிஸ் வரலாற்றில் இடம்பிடித்தார்.

 

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நட்புரீதியிலான சர்வதேச அழைப்பு வலைப்பந்தாட்ட தொடரில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை வலைப்பந்தாட்ட அணி சம்பியனாகத் தெரிவாகியது.

.

இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

ஜுன் 

ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 09 பதக்கங்கங்களை வென்ற இலங்கை அணி, பதக்கப்பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்று புதிய வரலாறு படைத்தது.

மத்திய தூர ஓட்ட தேசிய சம்பியனான இந்துனில் ஹேரத், கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை சாதனையை 25 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார்.

ஜுலை

டாக்காவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனாகிய இலங்கை அணி, 2021 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கூடைப்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிக்குத் தெரிவாகியது.

.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிய நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த அசீல் அல் – ஹமாத் என்ற பெண் பிரான்ஸில் இடம்பெற்ற பார்முலா ஒன் (Formula One) கார் பந்தயத்தில் முதல் தடவையாக பங்குபற்றினார்.

ஆகஸ்ட்

மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

.

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் தடவையாக, 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டுத்துறை நிதியமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

.

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

.

39 வருடங்களுக்கு பிறகு இந்தியனாக சாதனை படைத்த பும்ரா

தென் கொரியாவின் சென்சியோன் நகரில் நடைபெற்ற, 5 ஆவது கரம் உலகக் கிண்ணத்தில் இலங்கை ஆடவர் அணி முதல் தடவையாக சம்பியனாகத் தெரிவாகியதுடன், இலங்கை மகளிர் அணி 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

.

ஆசிய விளையாட்டு விழாவின் அதிவேக வீரராக சீனாவின் சூ பிங்டியானும், அதிவேக வீராங்கனையாக பஹ்ரெய்னின் எடிடியாங் ஒடியாங்கும் முடிசூடிக் கொண்டனர்.

.

105 வருட கால வரலாற்றைக் கொண்ட ‘டுவர் டீ பிரான்ஸ்’ சைக்கிளோட்ட பந்தயத்தின் இவ்வருடத்துக்கான சம்பியனாக பிரித்தானிய வீரரான ஜெரனைன்ட் தோமஸ் தெரிவானார்.

செப்டெம்பர்

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர்.

.

சிங்கப்பூரில் நடைபெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் நடப்புச் சம்பியன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி 5 ஆவது தடவையாகவும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகத் தெரிவாகியது.

.

ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக கொழும்பில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

.

இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு செயற்திட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மேலும் பல ரகசியங்களை வெளியிட்ட ஸ்மித்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதி போட்டியில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார்.

.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை முதல் தடவையாக ஜப்பான் நாட்டின் நயோமி ஒசாக்கா வென்றார்.

ஒக்டோபர்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற்ற 3 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத் ஆண்களுக்கான டி-46 பிரிவு ஈட்டி எறிதலில் 61.84 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 3 ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலகின் அதிபார நட்சத்திர குத்துச்சண்டை வீரர்கள் பங்குகொள்ளும் UFC குத்துச்சண்டை கோதாவின் இறுதிப் போட்டியில் அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை வீழ்த்தி ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோ சம்பியன் பட்டம் வென்றார்.

நவம்பர்

31 வயதான செர்பிய நாட்டு வீரர் நொவேக் ஜொகோவிச், பாரிஸ் மாஸ்டர் டென்னிஸ் பட்டத்தை வென்று மீண்டும் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றினார்.

.

போர்முயுலா 1 (Formula 1) கார்பந்தயத்தின் நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹெமில்டன் தொடர்ந்து 2 ஆவது தடவையாகவும் உலக மோட்டார் பந்தய சம்பியனாகத் தெரிவானார்.

.

பந்தை சேதப்படுத்துமாறு கூறியது யார்? ; உண்மையை வெளியிட்ட பென்கிரொப்ட்

டிசம்பர்

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை கென்யாவின் மரதன் ஓட்ட வீரரான எலியுட் கிப்சொக் பெற்றுக்கொள்ள, அதிசிறந்த வீராங்கனைக்கான விருதை கொலம்பியாவைச் சேர்ந்த நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் வீராங்கனையான கெத்தரின் இபர்குவென் தட்டிச் சென்றார்.

இலங்கையில் முதல் தடவையாக நடைபெற்ற ஆசிய மற்றும் தெற்காசிய கயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கை பெண்கள் கயிறிழுத்தல் அணி ஆசிய கயிறிழுத்தலில் 2 தங்கங்களையும், தெற்காசிய கயிறிழுத்தலில் 2 தங்கங்களையும் வென்றன.

.

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூஷன் அண்டன் புஷ்பராஜ், உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் முதல்  தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<