கோர்டோய்ஸை விடுவித்த செல்சி ஸ்பெயின் கோல்காப்பாளரை சாதனை தொகைக்கு வாங்கியது

216

கோல்காப்பாளர் ஒருவருக்கான அதிக தொகையான 80 மில்லியன் யூரோவுக்கு ஸ்பெயினின் கேபா அரிசபாலாகாவை அத்லடிக் பில்போ கழகத்தில் இருந்து இங்கிலாந்தின் செல்சி கால்பந்து அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

மறுபுறம் செல்சி தனது கோல்காப்பாளரான திபட் கோர்டோய்ஸை ஸ்பெயினின் ரியெல் மெட்ரிக் கழகத்திற்கு விடுவிக்க ஒப்பந்தம் செய்திருப்பதோடு, இந்த உடன்படிக்கையின்படி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய குரோஷியாவின் மத்தியகள வீரர் மாடியோ கோவாசிக் ரியல் மெட்ரிட்டில் இருந்து செல்சிக்கு மாறுகிறார்.

அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு …

பெல்ஜியம் கோல்காப்பளர் கோர்டோய்ஸ், ரியல் மெட்ரிட் சென்ற விரைவிலேயே செல்சி அணி 23 வயதுடைய அரிசாபாலாகாவை தனது அணிக்கு அழைத்துக் கொண்டது. இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக விலையுடைய கோல்காப்பாளராக பதிவான பிரேசிலின் அலிசன் ரம்சஸ் பேக்கரின் சாதனையை ஒரு மாதத்திற்குள் அரிசபாலாகா முறியடித்துள்ளார்.

அலிசன், கடந்த மாத நடுப்பகுதியில் ரோமா கழகத்தில் இருந்து இங்கிலாந்தின் லிவர்பூல் அணிக்கு 75 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார்.

இதன்மூலம், அதிக விலைகொண்ட கோல்காப்பாளர் என 17 ஆண்டுகள் நீடித்த சாதனை வெறும் 20 தினங்களுக்கு அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு ஜுவான்டஸ் அணியால் 53 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்ட கியான்லுகி பப்போனே உலகின் விலை உயர்ந்த கோல்காப்பாளராக நீண்ட காலம் சாதனையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.  

புதிய பிரீமியர் லீக் பருவத்தை ஒட்டி ஏழு ஆண்டு ஒப்பந்தமாக ஸ்பெயின் கோல்காப்பாளர் ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் (செல்சி அணியின் மைதானம்) வருகிறார்என்று செல்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் இணைந்தார் விடல்

சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ …

கடந்த இரண்டு பருவங்களாக அத்லடிக் பில்போ கழகத்தில் ஆடிய அரிசபாலாகா 56 லா லிகா போட்டிகளில் பங்கேற்றிருப்பதோடு, ஸ்பெயின் அணிக்காக ஒரு போட்டியில் கோல்காப்பளராக செயற்பட்டுள்ளது.   

அந்த கழகம் வென்றிருக்கும் கிண்ணங்கள், வீரர்கள், அந்த நகரம், இங்கிலீஷ் பிரீமியர் லீக் என்று அந்த கழகத்தில் (செல்சி) இணைய பல விடங்கள் என்னை கவர்ந்ததுஎன்று அரிசபாலாகா கூறினார்.

மறுபுறம், 2011 தொடக்கம் செல்சி அணியின் முதலாம் இலக்க ஜெர்சியை வென்ற கோர்டோய்ஸ் அந்த அணியில் நீடிப்பது குறித்து அண்மைய மாதங்களாக நிச்சயமற்ற தன்மை நீடித்ததோடு, அணியின் பயிற்சிகளையும் அவர் தவிர்த்து வந்தார்.  

இந்நிலையில் அவரை கிட்டத்தட்ட 35 மில்லியன் யூரோவுக்கு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியல் மெட்ரிட் வாங்கியுள்ளது. 26 வயதுடைய பெல்ஜியம் கோல்காப்பாளரான கோர்டோய்ஸ் 2023-24 பருவம் வரை ரியெல் மெட்ரிட்டுடன் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும் …

செல்சி அணிக்காக 154 போட்டிகளில் ஆடியிருக்கும் கோர்டோய்ஸ் இரண்டு தடவைகள் பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்றுள்ளார்.  

ரியெல் மெட்ரிட்டுடனான இந்த ஒப்பந்தத்தின் கீழ் அந்த அணியில் இருந்து 2019 ஜுன் 30 வரை மாடியோ கோவாசிக்கை செல்சி அணி வாங்கியுள்ளது.  

கோவாசிக்கை 2015இல் ரியல் மெட்ரிட் அணி இன்டர் மிலானிடம் இருந்து வாங்கியபோதும் அவரால் ஸ்பெயின் கழகத்தின் முதல் 11 வீரர்களில் இடம்பெறுவது தொடர்ந்து கடுமையாகவே இருந்து வருகிறது. அதற்காக லூகா மொட்ரிக், டோனி க்ரூஸ் மற்றும் இஸ்கோவுடன் போட்டியிட வேண்டியுள்ளது.  

தமது அணிக்கு மற்றொரு மத்தியகள வீரர் தேவைப்படுவதாக செல்சியின் புதிய தலைமை பயிற்சியாளர் மோரிசியொ சரி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 24 வயதுடைய கோவாசிக்கின் வருகை அந்த இடைவெளியை பூர்த்தி செய்வதாக உள்ளது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…