ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

144

தற்பொழுது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில், இலங்கையும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றது. இதில், கபடி போட்டிகளில் ஆறுதல் வெற்றி ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் தமது இறுதி குழுநிலை ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இலங்கை ஆடவர் கபடி அணி 33-22 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியிருக்கின்றது.

பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இலங்கை கபடி அணிகள்

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் மிகவும் கோலகலமாக நடைபெற்று வருகின்றன. இதில்,

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றன. கபடி போட்டிகளில் குழு A சார்பில் போட்டியிட்ட இலங்கையின் ஆடவர் கபடி அணி தமது முதல் போட்டியில், நடப்புச் சம்பியன் இந்தியாவுடன் 44-28 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தாலும், உலகின் நான்காவது நிலையில் இருக்கும் தாய்லாந்து கபடி அணியினை தமது இரண்டாவது போட்டியில் 46-29 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தது.

தாய்லாந்து அணியுடனான அபாரமான ஆட்டத்தினால், இலங்கை ஆடவர் கபடி அணிக்கு கபடி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும், அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷ் ஆண்கள் கபடி அணியினை எதிர்கொண்ட இலங்கை அதில் துரதிஷ்டவசமாக 29-25 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்ததுடன், அரையிறுதி வாய்ப்பினையும் இழந்து பதக்கம் பெறும் சந்தர்ப்பத்தினையும் இழந்தனர்.

இப்படியான ஒரு நிலையிலேயே இலங்கையின் ஆடவர் கபடி அணி இன்று (23) தென்கொரியாவை எதிர்கொண்டு தோல்வியினை தழுவி ஒரேயொரு வெற்றியுடன் இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்து கொள்கின்றது.

இலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் மிகவும் கோலகலமாக நடைபெற்று வருகின்ற 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் கபடி

தென் கொரிய ஆடவர் கபடி அணி, முன்னர் இடம்பெற்ற குழுநிலை ஆட்டம் ஒன்றில் நடப்புச் சம்பியன் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து கபடி தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாத நிலையில் இலங்கையை எதிர் கொண்டது. இதனால், இலங்கையுடான போட்டியிலும் தென் கொரியாவின் ஆதிக்கமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எதிர்பார்த்தது போலவே, தென் கொரிய அணி அபாரமாக செயற்பட்ட போதிலும்  இலங்கை வீரர்களும் சில வெற்றிகரமான முயற்சிகளை பலம் வாய்ந்த தென் கொரியாவிற்கு எதிராக மேற்கொண்டிருந்தனர். ஆனாலும், தென் கொரிய அணி போட்டியில் தொடர்ச்சியாக ஆதிக்கத்தை வெளிப்படுத்த இலங்கை வீரர்கள் தோல்வியினை தழுவினர்.  

இதேவேளை, கபடி தொடரில் பங்குபற்றிய இலங்கை மகளிர் கபடி அணி இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்று மொத்தமாக இரண்டு வெற்றிகளுடன் தொடரினை நிறைவு செய்து பதக்கம் பெற தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ThePapare weekly sports roundup Episode 42

இலங்கை அணியின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T-20 வெற்றி, இலங்கை கிரிக்கெட்