நடைபெறவிருக்கும் ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் இரண்டாம் கட்டத் தெரிவுப் போட்டிகள் இம்மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் தியகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.

முதலாம் நாள்

முதலாம் நாளில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் விமானப்படையை சேர்ந்த ஐ.சந்தருவன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். அவர் 5.11 மீட்டர் உயரத்தை தாண்டியதன் மூலமே இந்த சாதனையை நிலைநாட்டினார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் லங்கா லயன்ஸ் கழகம் சார்பாக கலந்து கொண்ட சரித் கப்புகொட்டுவ, 17.55 மீட்டர்கள் தூரம் குண்டு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டினார். அப்போட்டியில் 15.43 மீட்டர்கள் வீசிய கடற்படையின் பெரேரா இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஜே. அனித்தா,  தனது முன்னைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார். 3.46 மீட்டர் உயரம் பாய்ந்ததன் மூலமே இவர் இச்சாதனைக்கு உரித்தானார். தொடர்ந்து அவர் நிலைநாட்டிய சாதனைகளை அவரே முறியடித்து வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இவர் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடத்தில் காணப்படும் அச்சலா டயஸிற்கு இப்போட்டிகளில் பங்கொள்வதற்கு மெய்வல்லுனர் சங்கம் அனுமதியளிக்கவில்லை. இவர் முன்னர் ஊக்க மருந்து பாவித்தமைக்காக போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளாக நடந்த தெரிவுப் போட்டிகளில் பல சாதனைகள் நிலைநாட்டப்பட்டதோடு, பல வீரர்கள் தகுதி மட்டத்தினை பூர்த்தி செய்தனர். இரண்டாம் நாளுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுகள் நிறைவுபெற்றன.

இரண்டாம் நாள் முடிவின் பொழுது  ஈட்டி எறிதல் போட்டியில் தில்ஹானி லேகம்கே, 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அஜித் குமார மற்றும் திலிப் ருவன், பெண்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ருமேஷிகா ரத்நாயக்க, ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சுரஞ்சய டி சில்வா மற்றும் நீளம் பாய்தல் போட்டியில் தனுக லியனபதிரன ஆகியோர் தகுதி மட்டத்தை தாண்டி தமது திறமையை வெளிக்காட்டினர்.

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தகுதி பெறுவதற்கு 100 மீட்டர் தூரத்தை 11.61 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டி இருந்த நிலையில், அந்த தூரத்தை 11.60 செக்கன்களில் முடித்த தெற்காசிய சம்பியனான ருமேஷிகா ரத்நாயக்க, ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு தகுதி பெற்றார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தகுதி பெறும் மட்டம் 46.72 செக்கன்கள் ஆக இருந்த நிலையில், அத்தூரத்தை 46.66 செக்கன்களில் ஓடி முடித்த புஷ்பகுமார ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.89 மீட்டர் தூரம் பாய்ந்து தனுக லியனபதிரன தகுதி பெற்றார். இப்போட்டிக்கான தகுதி பெறும் மட்டம் 7.22 மீட்டராகவே காணப்பட்டது.

நீளம் பாய்தல் போட்டியில் மஞ்சுள குமார, 100 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் ஹிமாஷ ஏஷான், 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீராங்கனைகளான நிமாலி லியனாராச்சி மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகியோர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் தெரிவு மட்டத்தினை பூர்த்தி செய்த வீரர்கள் ஆவர்.

ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கு உத்தியோகபூர்வமாக 8 பேர் கொண்ட அணியே கலந்துகொள்ள இருந்த போதிலும், மேற்கூறப்பட்ட தெரிவுப்போட்டிகளில் வீர, வீராங்கனைகள் சிறந்த திறமைகளை வெளிக்காட்டியதனால், அணியில் 20 பேர் வரை உள்ளடக்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

எமக்கு கருத்து தெரிவித்த தேர்வாளர்கள் சபையின் செயலாளர் சமன் குமார “வீர, வீராங்கனைகள் நாம் எதிர்பார்த்ததைப் போன்று திறமைகளை வெளிக்காட்டினர். ஹிமாஷ ஏஷான் தற்போது இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே அவரது போட்டியில் வினோத் சில்வா 10.32 செக்கன்களில் ஓடி முடித்தார். அவர் மீதும் எதிர்பார்ப்பு வைத்துள்ளோம். இம்மைதானத்தில் நாம் எமது வீர, வீராங்கனைகளின் சிறப்பான திறமைகளை காணக்கூடியதாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சின் அனுமதியின் பின்னர், போட்டி நடைபெற ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வீரர்களை பயிற்சிபெறுவதற்கு இந்தியா அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் நடைபெறவிருந்த தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள், வீரர்களுக்கு ஓய்வு வழங்கும் முகமாக ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் – ஆண்கள் பிரிவு

100 மீட்டர்  

  • எஸ்.சில்வா                             காலி DAA           10.30 செக்கன்கள்
  • எம்.அஷ்ரப்                             இராணுவம்       10.58 செக்கன்கள்
  • ஷெகான் அம்பேபிடிய         இராணுவம்       10.65 செக்கன்கள்

200 மீட்டர்

  • எஸ்.சில்வா                             காலி DAA          20.84 செக்கன்கள்
  • ஏ.பிரேமகுமார                      இராணுவம்      21.40 செக்கன்கள்
  • எம்.ராஜஸ்கான்                    இராணுவம்      21.45 செக்கன்கள்

400 மீட்டர்

  • ஏ.பிரேமகுமார                      இராணுவம்    46.66 செக்கன்கள்
  • திலிப் குமார                          இராணுவம்    46.81 செக்கன்கள்
  • பிரதீப் குமார                         இராணுவம்    47.24 செக்கன்கள்

800 மீட்டர்

  • ஜி.இந்துனில்                      இராணுவம்         1:49.21 நிமிடங்கள்
  • எஸ்.குமார                         இராணுவம்         1.51.12 நிமிடங்கள்
  • எஸ்.பொன்சேகா              இராணுவம்         1:51.85 நிமிடங்கள்

1500 மீட்டர்

  • ஏ.சஞ்சீவ லக்மால்       இராணுவம்           3:54.05 நிமிடங்கள்
  • ஆர்.சதுரங்க                 இராணுவம்           3:54.82 நிமிடங்கள்
  • பி.குமார                        இராணுவம்           3:57.84 நிமிடங்கள்

5000 மீட்டர்

  • சமன் குமார                  இராணுவம்       15:17.98 நிமிடங்கள்
  • விஜேவிக்ரம                  இராணுவம்       15:30.53 நிமிடங்கள்
  • எம்.விஜேரத்ன              இராணுவம்       15:33.04 நிமிடங்கள்

10000 மீட்டர்

  • டி.அநுரசிறி                         கடற்படை          31:44.61 நிமிடங்கள்
  • எஸ்.ரத்நாயக்க                  இராணுவம்        31:56.16 நிமிடங்கள்
  • மகேஷ் குணாதிலக                                       31:57.71 நிமிடங்கள்

110 மீட்டர் தடை தாண்டல்

  • டி.நிர்மல்                    கடற்படை                  14.43 செக்கன்கள்
  • டி.இளங்ககோன்       இராணுவம்                14.88 செக்கன்கள்
  • எஸ்.அமரதுங்க         கடற்படை                  14.90 செக்கன்கள்

400 மீட்டர் தடை தாண்டல்

  • ஐ.ரணசிங்க               விமானப்படை                                     51.57 செக்கன்கள்
  • எ.சதுரங்க                  இராணுவம்                                          51.83 செக்கன்கள்
  • எல்.கொடிகார           இலங்கை பாடசாலைகள் AA            53.72 செக்கன்கள்

3000 மீட்டர்

  • எஸ்.புஷ்பகுமார            இராணுவம்           9:07.33 நிமிடங்கள்
  • ஜே.விஜேநாயக              இராணுவம்           9:21.29 நிமிடங்கள்
  • பி.ஹேரத்                        இராணுவம்           9:30.18 நிமிடங்கள்

உயரம் பாய்தல்

  • கே.பதிரான             விமானப்படை                         2.18 மீட்டர்
  • நீ.பெரேரா               இலங்கை பாடசாலை AA        2.14 மீட்டர்
  • கே.குறுகே               இராணுவம்                               2 மீட்டர்

நீளம் பாய்தல்

  • எம்.லியனபதிரன           விமானப்படை         7.89 மீட்டர்
  • எம்.மிப்ரான்                    இராணுவம்               7.65 மீட்டர்
  • எஸ்.தனஞ்சய                 இராணுவம்               7.57 மீட்டர்

கோலூன்றிப் பாய்தல்

  • சந்தருவன்                   விமானப்படை          5.11 மீட்டர்
  • சி.தினேஷ்                    இராணுவம்               4.40 மீட்டர்
  • சேனாரத்ன                  இராணுவம்               4.30 மீட்டர்

முப்பாய்ச்சல் (Triple Jump)

  • எஸ்.ஜெயசிங்க                இராணுவம்               16.26 மீட்டர்
  • எ.கருணாசிங்க               இராணுவம்               16.07 மீட்டர்
  • எஸ்.அஹமட்                    இராணுவம்               16.05 மீட்டர்

குண்டு எறிதல்

  • ச. கப்புகொட்டுவ                   லங்கா லயன்ஸ்             17.55 மீட்டர்
  • டி. பெரேரா                              கடற்படை                       15.43 மீட்டர்
  • எஸ். ஜயவர்தன                      இராணுவம்                     15.24 மீட்டர்

தட்டெறிதல்  

  • ச. கப்புகொட்டுவ                    லங்கா லயன்ஸ்             49.91 மீட்டர்
  • எஸ். ஆசிக்                               இராணுவம்                     42.28 மீட்டர்
  • ஏ. ரத்நாயக்க                           விமானப்படை               40.76 மீட்டர்

ஈட்டி எறிதல்

  • தயாரத்ன                      இராணுவம்                     80.34 மீட்டர்
  • ரணசிங்க                      இராணுவம்                     74.70 மீட்டர்
  • எஸ்.ரணசிங்க              பல்கலைக்கழகம்          70.37 மீட்டர்

குண்டை சுற்றி வீசுதல்

  • சிசிர குமார                                                 49.54 மீட்டர்
  • பி. எலன்சன்               இராணுவம்            46.37 மீட்டர்
  • எஸ். குமாரசிறி         இராணுவம்            46.02 மீட்டர்  

டெகாத்லன்

  • டி. பெரேரா           விமானப்படை           6696 புள்ளிகள்
  • பி. குமார               பொலிஸ்                    5536 புள்ளிகள்
  • டி. பிரணாந்து      இராணுவம்                5527 புள்ளிகள்

பெறுபேறுகள் – பெண்கள் பிரிவு

100 மீட்டர்

  • ஆர். ரத்நாயக்க        கேகாலை DAA      11.74 செக்கன்கள்

200 மீட்டர்

  • ஆர். ரத்நாயக்க        கேகாலை DAA      23.85 செக்கன்கள்

400 மீட்டர்

  • என். மதுஷிகா          விமானப்படை      54.16 செக்கன்கள்

800 மீட்டர்

  • எல். நிமாலி                விமானப்படை      2:06.33 நிமிடங்கள்

1500 மீட்டர்

  • ஏ. அபேரத்ன             கடற்படை              4:22.75 நிமிடங்கள்

5000 மீட்டர்

  • என். ரத்நாயக்க       இராணுவம்           16:32.98 நிமிடங்கள்

10000 மீட்டர்

  • எல். ஆரிதாஸ          விமானப்படை      37:23.05 நிமிடங்கள்

100 மீட்டர் தடை தாண்டல்

  • எல். சுகந்தி                இராணுவம்          14.27 செக்கன்கள்

400 மீட்டர் தடை தாண்டல்

  • என். விக்ரமசிங்க     இராணுவம்         1:00.33 நிமிடங்கள்

3000 மீட்டர்

  • டி. குமார                    இராணுவம்         10:52.90 நிமிடங்கள்

உயரம் பாய்தல்

  • கே. ரணசிங்க            கடற்படை           1.77 மீட்டர்

நீளம் பாய்தல்

  • அ. பூல்வங்ச                                              5.95 மீட்டர்

கோலூன்றிப் பாய்தல்

  • ஜே. அனித்தா           யாழ்ப்பாணம் DAA        3.46 மீட்டர்

முப்பாய்ச்சல் (Triple Jump)

  • டி. லக்ஷணி           இராணுவம்                    13.54 மீட்டர்

குண்டெறிதல்        

  • கே. பிரணாந்து       விமானப்படை             14.96 மீட்டர்

தட்டெறிதல்

  • சில்வா                   லங்கா லயன்ஸ்             44.16 மீட்டர்

ஈட்டி எறிதல்

  • டி. லேகம்கே         இராணுவம்                     56.30 மீட்டர்

குண்டை சுற்றி எறிதல்

  • எ. மதுவந்தி            இராணுவம்                    46.52 மீட்டர்

டெகாத்லன்  

  • ஹர்ஷனி ஜெயகாந்த            பொலிஸ்         4061 புள்ளிகள்