ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு முதல் வெற்றி

480
SLV - Sri Lankan Volleyballers (FB)

இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவில் போட்டியிட்டு வரும் இலங்கை கரப்பந்தாட்ட அணி, இன்று (23) நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது குழுநிலைப் போட்டியில் வியட்நாம் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இன்று பிற்பகல் ஆரம்பமாகிய இந்த போட்டியில், ஆரம்பம் முதல் நுணுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி வியட்நாம் அணிக்கு கடும் சவாலை விளைவித்தது.

பதக்க வாய்ப்பை இழந்தது இலங்கை கடற்கரை கரப்பந்து ஜோடி

வியட்நாம் அணி தங்களது முதல் போட்டியில் ஆசியாவின் பலம் வாய்ந்த சீன அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த போட்டியில் அதிகமான எதிர்ப்பார்ப்பு வியட்நாம் அணியின் பக்கமே இருந்தது.

இதன்படி முதல் செட்டில் இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். செட்டின் இடைக்கிடையில் சில முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்தாலும் 20 புள்ளிகள் வரை இரு அணிகளும் சமமாக முன்னேறிச் சென்றன. இறுதி நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட இலங்கை அணி, கடைசி புள்ளிகளை தங்கள் வசப்படுத்தி 25-23 என முதல் செட்டை கைப்பற்றியது.

முதல் செட்டை கைப்பற்றிய இலங்கை அணி அடுத்தடுத்த செட்களில் நம்பிக்கையுடன் விளையாடியது. வியட்நாம் அணிக்கு எவ்வித மேலதிக வாய்ப்புகளையும் வழங்காத இலங்கை அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை முறையே 25-18, 25-18 என்ற அடிப்படையில் கைப்பற்றி வெற்றிபெற்றது.

போட்டியில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட தீப்தி ரொமேஷ், ஜனித சுரத் மற்றும் லசிந்து மீத்மல் ஆகியோர் அணிக்காக அதிகமான புள்ளிகளை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதேவேளை, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி E பிரிவின் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சீனாவுக்கு எதிரான இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுமாயின் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


தாய்லாந்து எதிர் இலங்கை

தங்களது முதல் போட்டியில் விளையாடிய இலங்கை கரப்பந்தாட்ட அணி, தாய்லாந்து அணியிடம் 1-3 என போராடி தோல்வியை தழுவியது.  குறித்த போட்டியில் களமிறங்கிய இலங்கை (ஆசிய தரவரிசை 14) அணி ஆரம்பத்தில், ஆசிய தரவரிசையில் 11வது இடத்திலிருக்கும் தாய்லாந்து அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் விளையாடியது.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

முதல் செட்டில் தாய்லாந்து அணியை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அணி, 12 புள்ளிகள் முன்னிலையில் 25-13 என வெற்றியைப் பெற்று முன்னிலையடைந்தது.

இரண்டாவது செட்டிலும் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் பாதியில் 15-13 என்ற முன்னிலையுடன் விளையாடிய போதும், தாய்லாந்து அணி 10 புள்ளிகள் முன்னேற்றத்துடன் 23 புள்ளிகளை பெற்று வெற்றியை நெருங்கியது. இலங்கை அணி முயற்சிகளை மேற்கொண்ட போதும், இரண்டாவது செட்டை 25-21 என தாய்லாந்து அணி கைப்பற்றி போட்டியை 1-1 என சமப்படுத்தியது.

தொடர்ந்து மூன்றாவது செட்டில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. இலங்கை அணி முதலில் 10-6 என்ற முன்னேறியது. தொடர்ந்து இலங்கை அணியின் முன்னிலையை தாய்லாந்து அணி தகர்க்க, இலங்கை மீண்டும் 20-16 என முன்னேறியது. ஆனால் குறித்த முன்னிலையை தகர்த்த தாய்லாந்து அணி 25-23 என வெற்றிபெற்று, போட்டியில் 2-1 என முன்னிலை பெற்றது.

அமரர் வைத்தியலிங்கம் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் கலையரசி அணிக்கு

இறுதியாக, இலங்கை அணியின் தோல்வியை தவிர்க்க வேண்டிய நான்காவது செட், விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டன. ஒருகட்டத்தில் 24-23 என இலங்கை அணி வெற்றியின் நுணிக்கு சென்றது. எனினும், சிறுசிறு தவறுகளால் மிக நெருக்கமான போட்டியில் இலங்கை அணி 26-27 என செட்டை இழந்து 1-3 என தோல்வி கண்டது.

போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களின் தவறுகள் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. பந்தை றைதலில் சிறந்த வீரராக விளங்கும் தீப்தி ரொமேஷ் தனக்கு கிடைத்த 15 வாய்புகளில் 11 வாய்ப்புகளில் எதிரணிக்கு புள்ளிகளை வழங்கியதுடன், அணியின் தடுப்பு மற்றும் பந்தை பெறுதலில் ஏற்பட்ட தவறுகளும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க