கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை

1075

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது அத்தியாயம், இன்று சனிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஆறு அணிகள் பலப்பரீட்சை நடாத்தும் இந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்முறை போன்று கடந்த காலங்களில் (2016 ஆம் ஆண்டு தவிர) ஒரு நாள் போட்டிகளாகவே  இடம்பெற்றிருந்தது.

1984 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என ஒவ்வொரு துறைகளிலும் பல சிறந்த பதிவுகள் வைக்கப்பட்டிருந்தன.  

ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்?

2014 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது

துடுப்பாட்ட பதிவுகள்  

அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள்

  • சனத் ஜயசூரிய (இலங்கை) – 1,220 ஓட்டங்கள் (சராசரி – 53.04)
  • குமார் சங்கக்கார (இலங்கை) – 1,075 ஓட்டங்கள் (சராசரி – 48.86)
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 971 ஓட்டங்கள் (சராசரி – 51.10)

அதிகூடிய கூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை

  • விராட் கோஹ்லி (இந்தியா)  – 182 எதிர் பாகிஸ்தான் – 2012
  • யூனூஸ் கான் (பாகிஸ்தான்) – 144 எதிர் ஹொங்கொங் – 2004
  • சொஹைப் மலிக் (பாகிஸ்தான்) – 143 எதிர் இந்தியா – 2004

சிறந்த துடுப்பாட்ட சராசரி

  • மஹேந்திர சிங் டோனி (இந்தியா) – 95.16
  • நவ்ஜோட் சிது (இந்தியா) – 66.25
  • மார்வன் அட்டபத்து (இலங்கை) – 64.20

அதிக சதங்கள்

  • சனத் ஜயசூரிய (இலங்கை) – 6
  • குமார் சங்கக்கார (இலங்கை) – 4
  • விராட் கோஹ்லி (இந்தியா) – 3

அதிக அரைச்சதங்கள்

  • குமார் சங்கக்கார (இலங்கை) – 12
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 9
  • சனத் ஜயசூரிய (இலங்கை) – 9

அதிக இணைப்பாட்டம்

  • முதல் விக்கெட் – 224 ஓட்டங்கள் – பாகிஸ்தான் (மொஹமட் ஹபீஸ், நசிர் ஜம்ஷெட்) எதிர் இந்தியா – 2012
  • இரண்டாம் விக்கெட் – 205 ஓட்டங்கள் – இந்தியா (கெளதம் கம்பீர், விராட் கோஹ்லி) எதிர் இலங்கை – 2012
  • மூன்றாம் விக்கெட் – 223 ஓட்டங்கள் – பாகிஸ்தான் (சொஹைப் மலிக், யூனூஸ் கான்) – 2004
  • நான்காவது விக்கெட் – 166 ஓட்டங்கள் – இந்தியா (மஹேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னா) – 2008
  • ஐந்தாவது விக்கெட் – 137 ஓட்டங்கள் – பாகிஸ்தான் (உமர் அக்மல், சஹீட் அப்ரிடி) எதிர் பங்களாதேஷ் – 2010
  • ஆறாவது விக்கெட் – 164 ஓட்டங்கள் – ஆப்கானிஸ்தான் (அஸ்கர் ஆப்கான், சமியுல்லாஹ் சென்வரி) – 2014
  • ஏழாவது விக்கெட் – 71 ஓட்டங்கள் – இலங்கை (ஹஷான் திலகரட்ன, குமார் தர்மசேன) எதிர் இந்தியா – 1995
  • எட்டாவது விக்கெட் – 100 ஓட்டங்கள் – பாகிஸ்தான் (பவாட் அலம், சொஹைல் தன்வீர்) எதிர் ஹொங்கொங் – 2008
  • ஒன்பதாவது விக்கெட் – 46 ஓட்டங்கள் – இந்தியா (ஹர்பஜன் சிங், ஸஹிர் கான்) எதிர் இலங்கை – 2004
  • பத்தாவது விக்கெட் – 30 ஓட்டங்கள் – பாகிஸ்தான் (சர்பராஸ் அஹ்மட், அய்சாஸ் சீமா) எதிர் பங்களாதேஷ் – 2012

ஆசிய கிண்ண குழாத்திலிருந்து வெளியேறும் தனுஷ்க குணதிலக

அதி கூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை பதிவு செய்த அணிகள்

  • பாகிஸ்தான் – 385/7 (50) ஓட்டங்கள் எதிர் பங்களாதேஷ் – 2010
  • இந்தியா – 374/4 (50) ஓட்டங்கள் எதிர் ஹொங்கொங் – 2008
  • இலங்கை – 357/9 (50) ஓட்டங்கள் எதிர் பங்களாதேஷ் – 2008

குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த அணிகள்

  • பங்களாதேஷ் – 87 (34.2) ஓட்டங்கள் எதிர் பாகிஸ்தான் – 2000
  • பங்களாதேஷ் – 94 (35.3) ஓட்டங்கள் எதிர் பாகிஸ்தான் – 1986
  • இலங்கை – 96 (41) ஓட்டங்கள் எதிர் இந்தியா – 1984

தொடர்கள் ரீதியாக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள்

  • 1984 – சுரிந்தர் கண்ணா (இந்தியா) – 107 ஓட்டங்கள்
  • 1986 – அர்ஜூன ரணதுங்க (இலங்கை) – 105 ஓட்டங்கள்
  • 1988 – இஜாஸ் அஹ்மட் (பாகிஸ்தான்) – 192 ஓட்டங்கள
  • 1990/91 – அர்ஜூன ரணதுங்க (இலங்கை) – 166 ஓட்டங்கள்
  • 1995 – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 205 ஓட்டங்கள்
  • 1997 – அர்ஜூன ரணதுங்க (இலங்கை) – 272 ஓட்டங்கள்
  • 2000 – மொஹமட் யூசுப் (பாகிஸ்தான்) – 295 ஓட்டங்கள்
  • 2004 – சொஹைப் மலிக் (பாகிஸ்தான்) – 316 ஓட்டங்கள்
  • 2008 – சனத் ஜயசூரிய (இலங்கை) – 378 ஓட்டங்கள்
  • 2010 – சஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்) – 265 ஓட்டங்கள்
  • 2012 – விராட் கோஹ்லி (இந்தியா) – 357 ஓட்டங்கள்
  • 2014 – லஹிரு திரிமான்ன (இலங்கை) – 279 ஓட்டங்கள்

பந்துவீச்சு பதிவுகள்

அதிக விக்கெட்டுக்கள்

  • முத்தையா முரளிதரன் (இலங்கை) – 30 விக்கெட்டுக்கள்
  • அஜந்த மெண்டிஸ் (இலங்கை) – 26 விக்கெட்டுக்கள்
  • சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்) – 25 விக்கெட்டுக்கள்

சிறந்த பந்துவீச்சு

  • அஜந்த மெண்டிஸ் (இலங்கை) – 6/13 எதிர் இந்தியா – 2008
  • ஆகிப் ஜாவேட் (பாகிஸ்தான்) – 5/19 எதிர் இந்தியா – 1995
  • அர்சாத் அய்யூப் (இந்தியா) – 5/21 எதிர் பாகிஸ்தான் – 1988

அதிக தடவைகள் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர்கள்

  • லசித் மாலிங்க (இலங்கை) – 3 தடவைகள்
  • அஜந்த மெண்டிஸ் (இலங்கை) – 2 தடவைகள்

இலங்கை அணியில் இணையவுள்ள அகில தனன்ஞய

தொடர்கள் ரீதியாக அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர்கள்

  • 1984 – ரவி சாஸ்த்திரி (இந்தியா) – 4 விக்கெட்டுக்கள்
  • 1986 – அப்துல் காதிர் (பாகிஸ்தான்) – 9 விக்கெட்டுக்கள்
  • 1988 – அர்சாத் அய்யூப் (இந்தியா) – 9 விக்கெட்டுக்கள்
  • 1990/91 – கபில் தேவ் (இந்தியா) – 9 விக்கெட்டுக்கள்
  • 1995 – அனில் கும்ப்ளே (இந்தியா) – 7 விக்கெட்டுக்கள்
  • 1997 – வெங்கடேஷ் பிரசாத் (இந்தியா) – 7 விக்கெட்டுக்கள்
  • 2000 – அப்துல் ரஸ்ஸாக் (பாகிஸ்தான்) – 8 விக்கெட்டுக்கள்
  • 2004 – இர்பான் பதான் (இந்தியா) – 14 விக்கெட்டுக்கள்
  • 2008 – அஜந்த மெண்டிஸ் (இலங்கை) – 17 விக்கெட்டுக்கள்
  • 2010 – லசித் மாலிங்க (இலங்கை) – 9 விக்கெட்டுக்கள்
  • 2012 – உமர் குல் (பாகிஸ்தான்) – 9 விக்கெட்டுக்கள்
  • 2014 – சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), லசித் மாலிங்க (இலங்கை) – 11 விக்கெட்டுக்கள்

களத்தடுப்பு பதிவுகள்

விக்கெட் காப்பாளராக அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற பங்களிப்பு செய்தவர்கள்

  • குமார் சங்கக்கார (இலங்கை)  – 36 (27 பிடியெடுப்புக்கள், 7 ஸ்டம்பிங்ஸ்)
  • மஹேந்திர சிங் டோனி (இந்தியா) – 24 (19 பிடியெடுப்புக்கள், 5 ஸ்டம்பிங்ஸ்)
  • மொயின் கான் (பாகிஸ்தான்) – 17 (12 பிடியெடுப்புக்கள், 3 ஸ்டம்பிங்ஸ்)

அதிக பிடியெடுப்புக்கள்

  • மஹேல ஜயவர்த்தன (இலங்கை) – 15
  • யூனூஸ் கான் (பாகிஸ்தான்) – 14
  • அரவிந்த டி சில்வா (இலங்கை) – 12

தனிநபர் பதிவுகள்

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

  • மஹேல ஜயவர்தன (இலங்கை) – 28 போட்டிகள்
  • சனத் ஜயசூரிய (இலங்கை) – 25 போட்டிகள்
  • அரவிந்த டி சில்வா (இலங்கை) – 24 போட்டிகள்

அணித்தலைவராக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

  • மஹேந்திர சிங் டோனி (இந்தியா) – 13 போட்டிகள்
  • அர்ஜூன ரணதுங்க (இலங்கை) – 13 போட்டிகள்
  • மஹேல ஜயவர்தன (இலங்கை) – 10 போட்டிகள்

தொடர் நாயகன் விருதுகள்

  • 1984 – சுரிந்தர் கண்ணா (இந்தியா)
  • 1986 – அர்ஜூன ரணதுங்க (இலங்கை)
  • 1988 – நவ்ஜோட் சிது (இந்தியா)
  • 1990/91 – விருது வழங்கப்படவில்லை
  • 1995 – நவ்ஜோட் சிது (இந்தியா)
  • 1997 – அர்ஜூன ரணதுங்க (இலங்கை)
  • 2000 – மொஹமட் யூசுப் (பாகிஸ்தான்)
  • 2004 – சனத் ஜயசூரிய (இலங்கை)
  • 2008 – அஜந்த மெண்டிஸ் (இலங்கை)
  • 2010 – சஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்)
  • 2012 – சஹீப் அல்- ஹசன் (பங்களாதேஷ்)
  • 2014 – லஹிரு திரிமான்ன (இலங்கை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<