நடைபெற்று முடிந்திருக்கும் மகளிர் அணிகளுக்கு இடையிலான, டிவிஷன் – I கால்பந்து தொடரின், தீர்மானம் மிக்க போட்டியொன்றில் இராணுவப்படை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளதுடன், முன்னர் நடைபெற்ற ஏனைய போட்டி சமநிலை அடைந்துள்ளது.

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம்

களனி கால்பந்து தொகுதி, மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், 10 வீராங்கனைகளுடன் மாத்திரம் விமானப்படை மகளிர் அணி இராணுவப்படையினை எதிர் கொண்டிருந்தது.

போட்டியை மத்திய களத்தில் இருந்து  இரு அணிகளும் மெதுவாகவே ஆரம்பித்திருந்தன. போட்டியின் ஆரம்பத்தினை தமதாக்கி கொள்ள இராணுவப்படை மகளிர் அணி சில வாய்ப்புகளை விமானப் படை மகளிர் அணிக்கு வழங்கி இருந்தது. எனினும், கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் சரிவர பயன்படுத்தியிருக்கவில்லை.

போட்டியில் தவறுகளை விட்டிருப்பினும், பின்னர் இராணுவப்படை அணி அதனை சரிசெய்து கொண்டு போட்டியின் ஆதிக்கத்தினை மெதுமெதுவாக தம்மிடையே கொண்டு வந்தது.

பின்னர், கோர்னர் வாய்ப்பு ஒன்றின் மூலம் கோல் பெறும் சந்தர்ப்பம் ஒன்றினை விமானப்படை பெற்று அந்த முயற்சி பின்னர், முறியடிக்கப்பட்டிருந்தது. இதனையடைத்து, தனக்கு கிடைத்த ப்ரீ கிக் (Free Kick) வாய்ப்பு ஒன்றின் மூலம் இராணுவப்படை அணியின், E.K. லியனகே முதல் கோலினைப் பெற்றுக் கொண்டார்.

முதல் பாதிஇராணுவப்படை விளையாட்டு கழகம்  1 – 0 விமானப்படை விளையாட்டு கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில், இரு அணிகளின் வீராங்கனைகளும் சோர்வினை காண்பித்தவாறு செயற்பட, போட்டியில் ஒரு மந்த நிலை காணப்பட்டது.

எனினும், அக்கணத்தில் இராணுவப்படையின் வீராங்கனை T.K. அஞ்சலவிற்கு இரண்டாவது எச்சரிக்கை மூலம், சிவப்பு அட்டை வழங்கப்பட போட்டி மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், பந்தின் ஆதிக்கத்தினைப் பெற்றுக்கொண்ட E.K. லியனகே மற்றும் N.C. கருணாரத்ன ஆகியோர் எதிரணியின் தகர்ப்பினை தடுத்து முன்னேறியதோடு தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டிருந்தனர்.

போட்டியின், இறுதி வரை அதே ஆக்ரோஷத்தை தொடர முடியாத காரணத்தினால், மேலதிக கோல்களை இராணுவப்படை விளையாட்டு கழகத்தினால் பெற முடியாவிட்டாலும், இப்போட்டியில் முதல் பாதியில் பெற்ற கோல் காரணமாக பெற்றுக்கொண்ட வெற்றியினால் மூன்று புள்ளிகளையும் அவ்வணி பெற்றுக் கொண்டது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டு கழகம்  1 – 0 விமானப்படை விளையாட்டு கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகி – E.K. லியனகே (இராணுவப்படை விளையாட்டு கழகம்)

கோல் பெற்றவர்கள்
இராணுவப்படை விளையாட்டுக்கழகம் – E.K. லியனகே 40’

மஞ்சள் அட்டைகள்
இராணுவப்படை விளையாட்டுக்கழகம் – T.K. அஞ்சல 15’,61’, K.K. விராங்க 71’
சிவப்பு அட்டைகள்
இராணுவப்படை விளையாட்டுக்கழகம் – T.K அஞ்சல 61’


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

கடந்த வாரம், வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடற்படை மகளிர் அணி, சொந்த மைதானத்தை கருத்திற் கொண்டு பலமான அணியொன்றுடன் களமிறங்கி இருந்தது.

போட்டியின், ஆரம்பத்தில் விரைவாக செயற்பட்டிருந்த விமானப்படை அணி சொந்த மைதான அணிக்கு வாய்ப்புகளினை குறைவாகவே தந்தது. தொடர்ந்து ஆதிக்கத்தினை செலுத்திய விமானப்படை அணிக்கு, தமது முதல் கோலினை அவ்வணித்தலைவி I.M. விதானகே எதிரணி கோல் காப்பாளரை தகர்த்து பெற்றுத் தந்தார்.

எனினும், பின்னர் சமபலத்தினை வெளிக்காட்டிய கடற்படை அணியில், தேசிய அணி வீராங்கனை மாதுக்கி பெரேரா கோல் காப்பளரிற்கு மேலாக இலகு கோல் ஒன்றினை பெற்றுக்கொண்டு, போட்டியை சமநிலைப்படுத்தினார்.

பின்னர், இரு அணிகளும் சம ஆதிக்கம் காட்டிய தருணத்தில், முதற்பாதி முடிவிற்கான சமிஞ்சை போட்டி நடுவரால் வழங்கப்பட்டது.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 1 – 1 விமானப்படை விளையாட்டு கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தினை, கடற்படை மகளிர் அணி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். எனினும், தமது வீராங்கனைகளை ஒரு ஒருங்கிணைப்புக்குள் கொண்டு வந்த விமானப்படை மகளிர் அணியினை பின்னர் எதிர்கொள்வது கடற்படைஅணிக்கு சிரமமாக மாறியது.

எனினும், தனது அழகிய பாதவேலைகள் மூலம் கடற்படை மகளிர் அணியின் துஷானி மதுசிக்கா போட்டியின் மத்திய களத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார். இரண்டாம் பாதியின் நடுப்பகுதியில் மாதுக்கி பெரேரா கோல் பெறும் சந்தர்ப்பம் ஒன்றினைப் பெற்றும் எதிரணி கோல் காப்பாளரினால் அது முறியடிக்கப்பட்டது.

எனினும், இறுதியில் இரு அணிகளினாலும் இரண்டாம் பாதியில் கோல்களினைப் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முழு நேரம்:  கடற்படை விளையாட்டுக் கழகம் 1 – 1 விமானப்படை விளையாட்டு கழகம்

ThePapare.com இன் ஆட்டநாயகி – துஷானி மதுசிக்கா

கோல் பெற்றவர்கள்
கடற்படை விளையாட்டுக் கழகம் – மாதுக்கி பெரேரா 21’
விமானப்படை விளையாட்டுக் கழகம் – I.M. விதானகே 6’

மஞ்சள் அட்டைகள்
கடற்படை விளையாட்டுக் கழகம் – ருஷானி குணவர்த்தன 67’
விமானப்படை விளையாட்டுக் கழகம் – CS பிரான்சிஸ் 62’