எண்டோ ஞாபகார்த்த சவால் கிண்ணத்தின் சம்பியனாகிய இளம் தாரகை 

275

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்த எண்டோ ஞாபகார்த்த T10 சாவால் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியனாக மட்டக்களப்பு இளம் தாரகை விளையாட்டு கழகம் (YSSC) முடிசூடிக்கொண்டது. 

மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் கடந்த ஜூலை 27ம், 28ம் மற்றும் ஆகஸ்ட் 3ம், 4ம் திகதிகளில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில்,  இளம் தாரகை கழகம் மற்றும் லக்கி விளையாட்டு கழகம் ஆகியன பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இங்கிலாந்தின் எஜ்பெஸ்டனில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடரின்…

இந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்கி விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இளம் தாரகை விளையாட்டு கழகம் 9.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றியிலக்கை அடைந்து, சம்பியனாகியது. 

தொடரின் சம்பியனாகிய இளம் தாரகை விளையாட்டு கழகம் வெற்றிக் கிண்ணம் மற்றும் 40 ஆயிரம் ரூபா பணப்பரிசை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இடத்தை பிடித்த லக்கி விளையாட்டு கழகத்திற்கு கிண்ணம் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. 

இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற மூன்றவாது இடத்துக்கான போட்டியில், டிஸ்கோ விளையாட்டு கழகத்தை வெற்றிக்கொண்ட யங் ஹீரோஸ் விளையாட்டு கழகம் 10 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது. 

தொடரை பொருத்தவரை, 5 போட்டிகளில் 209 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய லக்கி விளையாட்டு கழகத்தை சேர்ந்த ஜெ. சன்ஜீவ் சுற்றுத்தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது மற்றும் சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது என்பவற்றை வென்றதுடன், இவருக்கு 3000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. 

ஹொங்கொங்கை இலகுவாக வீழ்த்திய இலங்கை வீரர்கள்

மியன்மாரில் தற்போது நடபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் இலங்கை அணி தனது கடைசி…

இதனையடுத்து, இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பர்னாஸ் (இளம் தாரகை விளையாட்டு கழகம்) ஆட்டநாயகன் விருதை பெற்றார். அத்துடன் சுற்றுத் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக 5 போட்டிகளில் ஒரு ஹெட்ரிக் உள்ளடங்கலாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய செம் ரொமேஸ் (டிஸ்கோ விளையாட்டு கழகம்) தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, இந்தப் போட்டித் தொடரில், அருட்தந்தை போல் சட்குணநாயகம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அருட்தந்தை A.A. நவரத்னம் அடிகளார் கொளரவ அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக திரு. பயஸ் ஆனந்தராஜா (அதிபர், புனித மிக்கேல் கல்லூரி), திரு, திருமதி ஜெயச்சந்திரா (மறைந்த Anto Gnanaraj இன் பெற்றோர்,) திரு. சன்முககேசன் (Tournament Committee Chairman, BDCA) ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<