பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிறப்பு விருதுகள்

666
pakistan cricket honour

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2016ஆம் ஆண்டில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த வீரர்களை கௌரவிக்கும் கிரிக்கெட் விருது வழங்கும் விழா நேற்று லாகூரில் நடைபெற்றது.

இதன்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா பெற்றுக்கொண்டதுடன், ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதை பாபர் அசாமும், ஆண்டின் சிறந்த T-20 வீரருக்கான விருதை இமாத் வசீமும் பெற்றுக்கொண்டனர்.

திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி

பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண..

இந்நிலையில் ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவானார். ஆண்டின் வளர்ந்து வருகின்ற வீரருக்கான விருதுகளை இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி மற்றும் சுழற்பந்து வீச்சாளரான ஷதாப் கான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டின் அபிமானத்துக்குரிய இம்தியாஸ் அஹ்மட் வாழ்நாள் சாதனையாளர் விருதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மிஸ்பா உல் ஹக் பெற்றுக்கொண்டார்.

pakistan cricket honourபாகிஸ்தான் அணிக்காக பல வருடங்களாக மிகப் பெரிய சேவையாற்றி சர்வதேச போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அவ்வணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சஹீட் அப்ரிடி மற்றும் யூனிஸ்கான் ஆகிய இருவரும் இவ்விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளாவிட்டாலும், அவர்களது பங்களிப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற ஈதி அமைப்புக்கு(Eidhi Foundation) சுமார் 10 மில்லியன் ரூபா நிதியினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதன்போது அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தற்போது அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற உலக பதினொருவர் அணியினர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வசிம் அக்ரம், சொஹைப் அக்தர் உள்ளிட்ட வீரர்களளும் கலந்துகொண்டனர்.

கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்த இவ்விருது வழங்கும் விழா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான நஜாம் சேதியின் முயற்சியினால் இவ்வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.