ஸ்பெயினின் அதிர்ச்சித் தோல்வியோடு விடைபெறும் இனியஸ்டா

667
Getty Images

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரஷ்யாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறிய ஸ்பெயின் அணியின் முன்னணி வீரர் அன்ட்ரெஸ் இனியஸ்டா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

பெனால்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

குரோஷிய கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று பொனால்டி ஷுட் அவுட்களை …

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 அணிகள் மோதும் சுற்றில் ரஷ்யாவிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் ஸ்பெயின் தோல்வி அடைந்த போட்டியில் 34 வயதான இன்னியெஸ்டா ஒரு மாற்று வீரராகவே களமிறங்கினார்.   

இதில் அவர் பெனால்டி ஷூட் அவுட்டில் தனது நாட்டுக்காக கடைசி உதை மூலம் 131ஆவது போட்டியை முடித்துக் கொண்டார். இது அவரது கடைசி சர்வதேச போட்டியாகவும் அமைந்துள்ளது.

இது தேசிய அணிக்காக எனது கடைசி ஆட்டம் என்பதுவே உண்மைஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

உலகில் உள்ள அதிக ரசிகர்கள் விரும்பும் வீரர்களில் ஒருவரான இனியஸ்டா 2006 ஆம் ஆண்டு ஸ்பெயின் அணிக்கு முதல் முறை தேர்வு செய்யப்பட்டதோடு 2008 மற்றும் 2012இல் ஸ்பெயின் ஐரோப்பிய சம்பியன்சிப் வெல்ல அவர் பெரிதும் உதவியுள்ளார். அவரது 12 ஆண்டு சர்வதேச கால்பந்து வாழ்வில் 2010இல் ஸ்பெயின் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான வெற்றி கோலையும் பெற்றவராவார்.

எப்போதும் நாம் கனவு காண்பதுபோல் முடிவு ஒன்று கிடைக்காது என்று குறிப்பட்ட முன்னாள் பார்சிலோனா வீரராக இனியஸ்டா, இது எனது கால்பந்து வாழ்வில் கவலையான தினம் என்றார்.  

ஜப்பானிய அணியில் இணையும் பார்சிலோனா ஜாம்பவான் இனியஸ்டா

பார்சிலோனா கால்பந்து கழகத்தின் ஜாம்பவான் அன்ட்ரெஸ் இனியஸ்டா ஜப்பானின்…

இனியஸ்டா கடந்த மே மாதமே பார்சிலோனாவுடனான தனது 22 ஆண்டு கால்பந்து வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் ஜப்பானின் முன்னணி கழகமான விஸ்ஸல் கொபேவில் இணைந்துள்ளார்.  

தனது 12 வயதில் பார்சிலோனாவின் கனிஷ்ட அணியுடன் இணைந்த இனியஸ்டா அதன் சிரேஷ்ட அணிக்காக 674 போட்டிகளில் பங்கேற்று 32 கிண்ணங்களை வென்றுள்ளார்.  

இனியஸ்டா எமது வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹைரோ குறிப்பிட்டார்.  

மாற்று வீரராக அவர் களமிறங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது முதல் போட்டியில் பங்கேற்பது போலவே ஆடுவார். மனப்பூர்வமாக அவருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றும் ஹைரோ குறிப்பிட்டார்.     

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…