சாதனைகளுடனே இலங்கை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது

4358

கடந்த 21ஆம் திகதி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. லீட்ஸின் ஹெடிங்லே அரங்கில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மிகவும் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியினை (20 ஓட்டங்களால்) இலங்கை தோற்கடித்து த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்தது.

இலங்கை இரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்திய இந்த வெற்றி வேறு விதத்தில் (இலக்கங்களில்) எப்படி முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனையும் நோக்குவோம்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி ….

நேருக்கு நேர் மோதல்கள்

இந்த உலகக் கிண்ணத்துடன் சேர்த்து இலங்கை அணியும், இங்கிலாந்து அணியும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரையில் 11 தடவைகள் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 6 வெற்றிகளையும், இலங்கை அணி 5 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஆனால், இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற கடைசி வெற்றியினை 20 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்தது.

இதேநேரம், ஒருநாள் போட்டிகள் என்று பார்க்கும் போது இந்த உலகக் கிண்ணத் தொடரின் போட்டியுடன் சேர்த்து இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்ற போட்டிகள் சமமாகியிருக்கின்றன. அதன்படி, இதுவரையில் இரண்டு அணிகளும் 75 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருப்பதோடு அதில் இரண்டு அணிகளும் தலா 36 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

இதேநேரம், இரண்டு அணிகளும் ஆடிய ஒருபோட்டி சமநிலையில் நிறைவுற, இரண்டு போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணம்

ஓட்ட வீதம்

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியினர் 300 ஓட்டங்கள் பெறுவதனை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர். அப்படியாக அவர்கள் ஓட்டங்கள் பெறுவதில் இருக்க காரணம் எதுவென்று நோக்கினால் அவர்கள் ஓட்ட வீதத்தில் (Strike Rate) அதிக கரிசனை செலுத்துவதை அவதானிக்க முடியும். இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்களும் அவர்களது ஓட்ட வீதத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இதனால், தற்போது நடைபெற்றுவரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் முழு இங்கிலாந்து அணியினதும் ஓட்டவீதம் 117.29 ஆக உள்ளது.

இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

சர்வதேச கிரிக்கட்டில் எதிர்பாராத திருப்பங……..

இங்கிலாந்து அணி, இந்த உலகக் கிண்ணத்தில் இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளில் 103.66, 111.33, 128.66, 107.03 மற்றும் 132.33 என சிறந்த ஓட்ட வீதங்களிலேயே ஓட்டங்கள் பெற்றிருந்தது. ஆனால், இலங்கை அணியுடனான உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஓட்டவீதம் 75.17 ஆகவே இருந்தது. அதாவது இங்கிலாந்து அணி இலங்கை அணியுடனான போட்டியில் 100 பந்துகளுக்கு 75.17 ஓட்டங்களையே பெற்றது.

இதேநேரம், இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய போட்டிகளிலும் அதன் முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் குறைந்தது ஒருவரேனும் நூற்றுக்கு கூடுதலான ஓட்ட வீதத்தையே காண்பித்திருந்தனர். ஆனால், இலங்கை அணியுடனான உலகக் கிண்ணப் போட்டியில் அவ்வாறு அமைந்திருக்கவில்லை.

அனைத்து விக்கெட்டுகளையும் இழத்தல்

இங்கிலாந்து இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் எந்தவொரு போட்டிகளிலும் தமது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுக்காமல் இருந்த அணியாக காணப்பட்டது.  இந்நிலையில், இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத்தில் தாம் இங்கிலாந்துடன் ஆடிய போட்டியில் இங்கிலாந்தின் அனைத்து வீரர்களையும் ஆட்டமிழக்க செய்து இத்தொடரில் அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் அணியாக மாறியது.

ஆனால், இதற்கு முன்னர் ஒருநாள் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி கைப்பற்றிய சம்பவம் 2014ஆம் ஆண்டிலேயே பதிவாகியது.   

Photos : Sri Lanka vs England | ICC Cricket World Cup 2019 – Match 27

குறித்த இடத்தில் மோசமான ஓட்டப்பதிவு……..

குறித்த இடத்தில் மோசமான ஓட்டப்பதிவு

இங்கிலாந்து அணி, 2001 ஹெடிங்லே மைதானத்தில் பாகிஸ்தான் மூலம் 156 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டதன் பின்னர் இவ்வளவு குறைவான ஓட்டங்களுக்குள் (212) ஆட்டமிழந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இணைப்பாட்டம்

இங்கிலாந்து அணியினர், ஒருநாள் போட்டிகளில் இணைப்பாட்டங்களை உருவாக்குவதில் சிறந்தவர்களாகவே இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இருந்து இதுவரையில் 65 தடவைகள் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி 100 ஒட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டத்தினை பதிவு செய்திருக்கின்றது இதேநேரம், இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளிலும் 100 இற்கு மேலான ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற சந்தர்ப்பங்கள் ஒரு தடவையேனும் பதிவாகியிருக்கின்றது.

எனினும், இலங்கை அணியுடனான உலகக் கிண்ண மோதலில் எதிரணியின் பந்துவீச்சுக்கு துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய காரணத்தினால் அவர்களுக்கு 100 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டம் ஒன்றினை பெற முடியாமல் போய்விட்டது. இலங்கை அணியுடனான போட்டியில் இங்கிலாந்து அணி பதிவு செய்த அதிகூடிய இணைப்பாட்டம் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஜோடி பெற்றதாகும். அந்த இணைப்பாட்டம் 54 ஓட்டங்களாக அமைந்திருந்தது.  

கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தை பாராட்டிய ஜேசன் ஹோல்டர்

மன்செஸ்டர் நகரில் நேற்று (22) இடம்பெற்று முடிந்த ……….

மோசமான பவர் பிளே

கடந்த காலங்களில் இங்கிலாந்து அணி, களத்தடுப்பு கட்டுப்பாடுகளை மிகவும் தனித்துவமான முறையிலேயே பயன்படுத்தியிருந்தது. ஆனால், மாலிங்கவும் நுவன் பிரதீப்பும் இணைந்த இலங்கை அணியின் பந்துவீச்சினை எதிர்த்து முதல் பவர் பிளேயில் (முதல் 10 ஓவர்களுக்கும்) இங்கிலாந்து அணியினால் 38 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அதோடு, இந்த 38 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓய்வறைக்கும் சென்றிருந்தனர்.

மேலும், இங்கிலாந்து அணி இலங்கையுடன் முதல் பவர் பிளேயில் பெற்ற 38 ஓட்டங்களே 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் பவர்பிளே ஒன்றில் பெற்ற மிகக் குறைவான ஓட்டங்களாகும். இதேநேரம், குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 15 ஓவர்களுக்கு 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இங்கிலாந்து அணி இப்படியாக ஒரு நிலையில் குறைவான ஓட்டங்கள் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தனன்ஜய டி சில்வாவின் சிறந்தபந்துவீச்சு

மிகவும் குறைவான அனுபவத்தை கொண்டிருக்கும் தனன்ஜய டி சில்வா, உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்ததோடு, ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை உற்சாக மருந்தாக கொண்டு இலங்கை முன்னேற வேண்டும் – சங்கக்கார

லீட்ஸ் நகரில் நேற்று (21) இடம்பெற்று முடிந்த ………..

மாலிங்கவின் சாதனை

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இங்கிலாந்து அணியுடனான போட்டியின் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்கிற சிறப்பு அடைவுமட்டத்தினை பெற்றார். மாலிங்க குறித்த போட்டியில் கைப்பற்றிய விக்கெட்டுகள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியாக அமைந்தததோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும் இருந்தது.

இதேநேரம், லசித் மாலிங்க இப்போட்டியில் வெளிப்படுத்திய பந்துவீச்சு அவர் 2018ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் பதிவு செய்த சிறந்த பந்துவீச்சு பெறுதியாகவும் மாறியது. மாலிங்க கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராகவே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சு பெறுதியினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஓட்டங்கள் கொடுக்காத நுவன் பிரதீப்

இங்கிலாந்து அணிக்கு நுவன் பிரதீப் விருப்பத்திற்குரிய ஒரு பந்துவீச்சாளர். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ஓவர் ஒன்றுக்கு நுவன் பிரதீப் 6 ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விட்டுகொடுத்திருப்பதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக 45 என்கிற மோசமான பந்துவீச்சு சராசரியினையும் கொண்டிருக்கின்றார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் நுவான் பிரதீப் ஓவர் ஒன்றுக்கு 3.80 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது பிரதீப் இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த ஓட்டங்கள் பதிவு செய்த சிறந்த பதிவாகும்.

அபாரப் பந்துவீச்சால் உலகக் கிண்ண அரையிறுதிக் கனவை தக்கவைத்த இலங்கை

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில்…….

வழமைக்கு திரும்பிய மெதிவ்ஸ்

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு தனது வழமையான துடுப்பாட்ட பாணியினை எடுக்க, இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அவர் பெற்ற ஓட்டங்கள் உதவியாக இருந்தது. மெதிவ்ஸ், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் நின்று 115 பந்துகளில் 85 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் பதிவு செய்த அதிகூடிய ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அதோடு இப்போட்டியின் மூலம் மெதிவ்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக நேரம் களத்தில் நின்று துடுப்பாடிய சிறந்த பதிவினையும் வைத்தார். மெதிவ்ஸின் துடுப்பாட்டம் இலங்கை அணி இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக ஒருநாள் போட்டி ஒன்றில் 50 ஓவர்களுக்கும் முழுமையாக துடுப்பாடவும் ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியிருந்தது.

விக்கெட் காப்பாளராக குசல் பெரேராவின் சாதனை

குசல் பெரேரா, இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விக்கெட் காப்பளராக இருந்து கடுமையாக உழைத்திருந்தார். அந்தவகையில் பெரேரா இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரத்னவினை நடுவர் மேன்முறையீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி விக்கெட் ஒன்றை பெற காரணமாக இருந்தார்.  

மேலும் குசல் பெரேரா போட்டியில் நான்கு பிடியெடுப்புகளை மேற்கொண்டு 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் ஒருநாள் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுக்க காரணமாக இருந்த விக்கெட் காப்பாளராகவும் மாறினார். இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறந்த விக்கெட் காப்பாளராக செயற்பட்ட குமார் சங்கக்காரவின் சாதனையினையும் குசல் பெரேரா சமன் செய்தார்.

கிரிக்கெட்

பாடசாலைகளுக்கு இடையில், தேசிய மற்றும் சர்வதே……

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க