ஓய்விலிருந்து மீண்டும் வந்த அம்பதி ராயுடுவிற்கு தலைவர் பதவி

74
PTI

உலகக் கிண்ண அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து விரக்தியில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அம்பதி ராயுடு, ஓய்விலிருந்து விலகியதை அடுத்து மீண்டும் ஹைதராபாத் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன்படி, இந்த மாத இறுதியில் நடைபெறும் விஜய் ஹஸாரே கிண்ண 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணியை அம்பதி ராயுடு வழிநடத்துகிறார்.

டி20 அரங்கில் சதங்களில் சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டியில் சென்ட். கிட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் சதம் அடித்து அசத்தியதுடன்…

முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு அம்பதி ராயுடுதான் இந்திய ஒருநாள் அணியின் 4ஆம் இலக்க வீரராகத் திகழ்வார் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி அறிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் தான் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 217 ஓட்டங்களை எடுத்தார். நியூஸிலாந்திலும் 190 ஓட்டங்களை எடுத்து அசத்தினார். ஆனால், இறுதியாக கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது அம்பதி ராயுடு 13, 18, 2 என்று குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சொதப்பினார்

இதனையடுத்து இந்திய அணியின் 4ஆம் நிலை கவலை  தீர்க்கும் வீரராக கோஹ்லியால் கருதப்பட்ட அம்பதி ராயுடு இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

இதனால் உலகக் கிண்ண அணியில் ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்க அந்நாட்டு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்தது

இளையோர் ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடிய இந்திய அணி

த்ரில்லாக நடைபெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 5…

எனினும், உலகக் கிண்ண குழாத்தில் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ராயுடுவுக்கு ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகியும் இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த விரக்தியில் தான் அனைத்துவகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அம்பதி ராயுடு திடீர் அறிவிப்பினை வெளியிட்டார்

எனினும், கடந்த ஒன்றரை மாதங்களாக மௌனமாக இருந்த அவர், திடீரென ஓய்விலிருந்து வெளியே வர விரும்புகிறேன் எனவும், மீண்டும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் விளையாடுவேன் என்று பரபரப்பு அறிவிப்பினை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில், அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ள இந்தியாவின் பிரதான உள்ளூர் போட்டிகளில் ஒன்றாக விளங்குகின்ற விஜய் ஹஸாரே தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அம்பதி ராயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுதொடர்பில் ஹைதராபாத் அணியின் தேர்வாளர் நோயல் டேவிட் கூறுகையில், அம்புதி ராயுடுவிடம் இன்னும் 5 வருடங்களுக்கான கிரிக்கெட் மீதமுள்ளது. அவருக்கு தற்போது 33 வயது. அவருக்கு துரதிஷ்டமாக இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அந்த கவலையை மிகவும் மோசமாக உணர்ந்தார், மனச்சோர்வடைந்தார். இதனால், திடீரென ஓய்வினை அறிவித்தார்

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரில், இன்று நடைபெற்ற…

எனினும், நானும் விவிஎஸ் லக்ஷ்மனும், தொலைபேசியூடாக அவரை ஆறுதல்படுத்தினோம். உங்களுக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. எனவே, மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாருங்கள். மாநில அணிக்காக விளையாடுங்கள், பின்னர் தேசிய அணிக்கு மீண்டும் வருவது பற்றி சிந்தியுங்கள். உங்கள் அனுபவம் இளைஞர்களுக்கு உதவும், ஹைதராபாத் அணிக்கு பயனளிக்கும் என அவரிடம் சுட்டிக்காட்டினோம்” என அவர் தெரிவித்தார்

இந்த நிலையில், அம்பதி ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், தன்னை மீண்டும் கிரிக்கெட்டுக்கு அழைத்து வருவதற்கு காரணமாக இருந்த டேவிட், லக்ஷ்மன் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  

இதேவேளை, அம்பதி ராயுடுவின் அணியில் இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான முஹமது சிராஜ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<