இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக அலன் டொனால்ட்

1303

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட், .சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சகல துறையிலும் பிரகாசித்த அசெல் சிகெரா

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும்..

குறித்த தொடருக்காக இலங்கை அணியின் ஆலோசகராக பணி புரிவதற்குவெள்ளை மின்னல்என அழைக்கப்படும் அலன் டொனால்டை, அவர் தற்பொழுது பயிற்றுவிப்பாளராக பணி புரியும்கென்ட்கழகம் 2 மாதங்களுக்கு விடுவித்துள்ளது.

தற்பொழுது 50 வயதையுடைய அலன் டொனால்ட், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய என்பவற்றின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சி வழங்கிய, மிகவும் அனுபவமிக்க ஆலோசகராவார்.

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர்களாகிய சமிந்த வாஸ், சம்பக ராமநாயக்க, ரவீந்திர புஷ்பகுமார மற்றும் நுவன் சொய்சா ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ள டொனால்ட், இலங்கை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கவுள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பல்லேகலையில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் இலங்கை அணியுடன் டொனால்ட் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.