85ஆவது முறையாக நடைபெறவுள்ள புனிதர்களின் சமர்

103

புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டி (BIG MATCH) இந்த ஆண்டு 85ஆவது தடவையாக மார்ச் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில்  கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இலங்கையில் கிரிக்கெட் பித்துக்காலம் (March Madness) என அழைக்கப்படும் மார்ச் மாதத்தினை அலங்கரிக்கும் கிரிக்கெட் சமர்களில் ஒன்றாக உள்ள இந்த பெரும் கிரிக்கெட் போட்டி கத்தோலிக்க பாடசாலைகள் இடையே இடம்பெறுகின்ற பழமைவாய்ந்த கிரிக்கெட் சமர்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

சமநிலையில் முடிவுற்ற 84 ஆவது புனிதர்களின் சமர்

84 ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த கொழும்பின் …

இம்முறை இடம்பெறவுள்ள கிரிக்கெட் பெரும் போட்டிக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata) அனுசரணை வழங்குவதன் மூலம், தொடர்ச்சியாக நான்காவது தடவை இந்த கிரிக்கெட் பெரும் போட்டியை வெற்றிகரமாக நடாத்த தனது பங்களிப்பினை வழங்குகின்றது.

கொழும்பு ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி இடையிலான இந்த கிரிக்கெட் பெரும் போட்டி அருட்தந்தை மோரிஸ் லி கோக் நினைவு கிண்ணத்திற்காக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏற்கனவே இடம்பெற்ற 84 கிரிக்கெட் பெரும் போட்டிகளில் 14 தடவைகள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி கிண்ணத்தை கைப்பற்றியதுடன், 12 தடவைகள் புனித பேதுரு கல்லூரி கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்தது.

இதேநேரம், கடைசியாக 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிரிக்கெட் பெரும் போட்டியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி அருட்தந்தை மோரிஸ் லி கொக் கிண்ணத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் பெரும் போட்டி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புனித பேதுரு கல்லூரியின் பிதா அருட்தந்தை ட்ரவர் மார்டின், “ புனிதர்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகள் இடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் சமராக உள்ளது. நான் இரண்டு அணிகளதும் தலைவர்களுக்கும், அவர்களது அணிகளுக்கும் கிரிக்கெட் பெரும் போட்டி இடம்பெறும் இரண்டு நாட்களில் சிறப்பாக செயற்பட எனது ஆசியினை வழங்கிக் கொள்கின்றேன். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Photo Album :  85th Battle of the Saints | Press Conference

இந்த கிரிக்கெட் போட்டியில் ஆடும் இரண்டு பாடசாலை அணிகளும் இலங்கை கிரிக்கெட் அணிக்காக சாதித்த பல வீரர்களை உருவாக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதில் புனித ஜோசப் கல்லூரி உருவாக்கிய வீரர்களாக அஞ்செலோ மெதிவ்ஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, திமுத் கருணாரத்ன, ஏஷ்லி டி சில்வா, மைக்கல் வன்டோர்ட், ரொஷேன் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம போன்றோரினையும் புனித பேதுரு கல்லூரி உருவாக்கிய வீரர்களாக றோய் டயஸ், ருமேஷ் ரத்னாயக்க, ரசல் அர்னோல்ட், வினோதன் ஜோன், அமல் சில்வா, கெளசால் லோக்கு ஆராச்சி மற்றும் மலிந்த வர்ணபுர ஆகியோரினையும் குறிப்பிட முடியும்.

இந்த கிரிக்கெட் பெரும் போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்த புனித ஜோசப் கல்லூரியின் பிதா அருட்தந்தை ட்ராவிஸ் கேப்ரியல்இலங்கை பாடசாலை நாட்காட்டியில் எங்களது பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டி இள மற்றும் சிரேஷ்ட வயதினர் இடையே எதிர்பார்க்கப்படும் முக்கிய கிரிக்கெட் பெரும் போட்டியாக அமைந்திருக்கின்றது நான் உறுதியாக இருக்கின்றேன். “ எனக் கூறியிருந்தார்.

இதேநேரம் மேலும் பேசிய அவர், 85ஆவது தடவையாக இடம்பெறும் இந்த கிரிக்கெட் பெரும் சமரிற்கு அனுசரணை வழங்கும் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, இரண்டு பாடசாலை அணிகளுக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பெட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) தங்களது கிரிக்கெட் வீரர்களை…

இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியினை தொடர்ந்து இரண்டு பாடசாலை அணிகளும் பீட்டர் . பிள்ளை கிண்ணத்திற்காக ஒருநாள் பெரும் சமரில் 45ஆவது முறையாக மார்ச் மாதம் 23ஆம் திகதி மோதுகின்றன. இந்த ஒருநாள் பெரும் சமர் கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதேநேரம், நடைபெறவுள்ள இரண்டு நாட்கள் கொண்ட பெரும் போட்டிக்கு ஹட்டன் நஷனல் வங்கி, .என்.சி (American National College) கல்வி நிறுவனம், எலிபன்ட் ஹவுஸ், கீல்ஸ் கிரேஸ்ட், மெகி (Maggi), சிலோன் பிஸ்கட் நிறுவனம் மற்றும் ஜெட் விங் ஹோட்டல் நிறுவனம் போன்றவையும் தங்களது ஆதரவை வழங்க காத்திருக்கின்றன.

இந்த பெரும் போட்டியை ThePapare.com ஊடாக நேரலையில் காண முடியும் என்பதோடு, டயலொக் தொலைகாட்சியில் அலைவரிசை 77 இலும், கையடக்க தொலைபேசியில் மைடிவி (MyTV) செயலி மூலமும் கண்டுகளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<