றக்பியை விட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பும் நியூசிலாந்து றக்பி வீரர்கள்!

77
©stuff.co.nz

நியூசிலாந்து றக்பி அணியின் முன்னணி வீரர்களான பியூடன் பாரெட் மற்றும் ஜோர்டி பாரெட் ஆகியோர் மீண்டும் உள்ளூர் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற றக்பி உலகக் கிண்ணத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து றக்பி அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ………

குறித்த உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக பாரெட் சகோதரர்களான பியூடன் பாரெட் மற்றும் ஜோர்டி பாரெட் ஆகியோர் விளையாடியிருந்தனர். இந்தநிலையில், றக்பி உலகக் கிண்ணத் தொடரின் ஏமாற்ற முடிவின் காரணமாக கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

பியூடன் பாரெட் மற்றும் ஜோர்டி பாரெட் ஆகியோர் அவர்களுடைய இளைய பருவத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருந்தனர். எனினும், றக்பியின் மீதிருந்த விருப்பத்தினால் கிரிக்கெட்டை விட்டு றக்பி பக்கம் திரும்பியிருந்தனர்.

குறித்த இருவரும் ஆரம்பத்தில் இரண்டாம் நிலை கழகமான பிஹமாவில் உள்ள சௌத் டரனாகி கழகத்துக்காக, நியூவ் ப்ளேமௌத் மெரிஸ் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளனர். அதுமாத்திரமின்றி வார இறுதி நாட்களில் கழக மட்ட போட்டிகளில் விளையாடி வந்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி பாரெட் சகோதரர்கள் கடந்த ஜனவரி மாதம் க்ரிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற டீம் கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 போட்டியில் டீம் றக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளனர்.  

பணம் வாங்க மறுத்த இந்திய சாரதியை விருந்துக்கு அழைத்த பாக். வீரர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த வாகன சாரதி ஒருவர் பாகிஸ்தான் ………….

இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக இருவரும் விளையாடியிருந்தனர். பியூடன் பாரெட் துடுப்பாட்டத்தில் 26 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் ஜோர்டி பாரெட் சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். இவர், துடுப்பாட்டத்தில் 26 பந்துகளில் 42 ஓட்டங்களை விளாசியதுடன், பந்துவீச்சில் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இவர்களின் இந்த பிரகாசிப்புடன் டீம் றக்பி அணி, குறித்த போட்டியில் வெற்றியையும் பதிவு செய்தது.

சென்ட்ரல் டிஸ்ட்ரிக் அணியின் 12வது வீரராக இருந்த ஜோர்டி பாரெட், 2016ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ணத்துக்கான மேலதிக வீரர்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், தொடருக்கான வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டிருந்தார்.

இந்தநிலையில், தங்களுடைய பழைய ஞாபகங்களை திரும்பிப்பார்க்கும் நோக்கில் பியூடன் பாரெட் மற்றும் ஜோர்டி பாரெட் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<