T20 தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி

67
©AFP

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இப்போட்டி வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

T20 தொடரினை சமநிலை செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் …….

ஆப்கான் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (17) இந்தியாவின் லக்னோ நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட் கான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி றஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடி துடுப்பாட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய றஹ்மானுல்லா குர்பாஸ் T20 சர்வதேச போட்டிகளில் அவரின் 2 ஆவது அரைச்சதத்தோடு 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் குவித்தார்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஷெல்டன் கொல்ட்ரல் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஷாய் ஹோப் அரைச்சதம் ஒன்றுடன் 52 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அவரது துடுப்பாட்டம் வீணானது.

மறுமுனையில், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுக்கள் சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணியின் றஹ்மானுல்லா குர்பாஸிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இப்போட்டியுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி இம்மாதம் 27 ஆம் திகதி T20 தொடர் இடம்பெற்ற இதே லக்னோ மைதானத்தில் நடைபெறுகின்றது. 

மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க

2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ……..

இதேவேளை, T20 தொடருக்கு முன்னர் இரு அணிகளும் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 156/8 (20) – றஹ்மானுல்லா குர்பாஸ் 79, ஷெல்டன் கொல்ட்ரல் 29/2, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 31/2, கீமோ போல் 26/2

மேற்கிந்திய தீவுகள் – 127/7 (20) – ஷாய் ஹோப் 52, நவீன்-உல்-ஹக் 24/3 

முடிவு – ஆப்கானிஸ்தான் 29 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<