மழை காரணமாக முத்தரப்பு T20 தொடர் கிண்ணம் பகிரப்பட்டது

92
Afghanistan Cricket Board Twitter

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டதால், வெற்றிக்கிண்ணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் பகிரப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டி இன்று (24) டாக்காவில் ஆரம்பமாகவிருந்தது. எனினும், போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்து சீரற்ற காலநிலை நீடித்து வந்தது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான…

இதன் காரணமாக நாணய சுழற்சி தாமதமாகிய நிலையில், போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் மழை குறுக்கிட்ட நிலையில், சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி, இறுதிப் போட்டியை நடத்துவதற்கு மேலதிக நாள் இல்லாத காரணத்தால், இரண்டு அணிகளுக்கும் கிண்ணம் பகிரப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் முத்தரப்பு T20 தொடருக்கான கிண்ணத்தை பகிர்ந்துகொண்டன.

இந்தப் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்களை பொருத்தவரை, ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தங்களுடைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற போதும், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. அத்துடன், இந்த போட்டியுடன் ஜிம்பாப்வே அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்ஸா சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.

எனினும், பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தன. இவ்விரண்டு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை, இறுதிப் போட்டி கைவிடப்பட்ட போதிலும் போட்டித் தொடரின் தொடர் ஆட்ட நாயகன் விருதினை ஆப்கானிஸ்தான் அணியின், ரஹ்மனுல்லாஹ் குர்பஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<