டி20 போட்டிகளின் தரவரிசையில் இலங்கையை பின்தள்ளிய ஆப்கான்

923
Afghanistan Cricket

சர்வதேச கிரகக்கெட் பேரவை (ஐ.சி.சி.) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிரிக்கெட் அணிகளின் புதிய  தரவரிசையை இன்று (2) வெளியிட்டுள்ளது.

இதில் T20I  போட்டிகளுக்கான புதிய தரவரிசையில், ஆப்கானிஸ்தான் அணி இலங்கையைப் பின்தள்ளி எட்டாம் இடத்திற்கு முன்னேறி சிறப்பான பதிவைக் காட்டியிருக்கின்றது. இதேவேளை, T20I அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஐ.சி.சி. இன் புதிய அணிகள் தரவரிசையில் குறிப்பிடும்படியான விடயங்கள்

  • T20I தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் பாகிஸ்தான் அணி தம்முடைய 04 தரநிலைப் புள்ளிகளையும் (Ratings Points) தக்கவைத்துக் கொண்டுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு நாள் அணிகளுக்கான தவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி  08 தரநிலைப் புள்ளிகளைப் பெற்று (ஒரு நாள் அணிகளின் தரவரிசையில்) மீண்டும் 125 தரநிலைப் புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு வந்திருக்கின்றது.
  • ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய அணிகளின் தரவரிசை வெளியிடப்படும் முன்னர், அதில் முதலாம் இடத்தில் இருந்த இந்திய அணி  தரநிலைப் புள்ளி ஒன்றை இழந்து தற்போது 122 தரநிலைப்புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது.
  • இந்தியாவை விட 09 தரநிலைப் புள்ளிகளால் பின்தங்கியிருக்கும் தென்னாபிரிக்க அணி மொத்தமாக 113  தரநிலைப் புள்ளிகளுடன் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அத்துடன், முன்னர் வெளியிடப்பட்டிருந்த ஒரு நாள் தரவரிசை அட்டவணையில் இரண்டாம் இடத்தில் இருந்த அவர்கள் தற்போது 04 தரநிலைப்புள்ளிகளையும் இழந்திருக்கின்றனர்.

ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறியிருக்கும் இங்கிலாந்து அணி ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்தியாவையும் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளி  முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது.

டெஸ்ட் தரவரிசையில் 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்ட இலங்கை

சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ஐ.சி.சி.) வெளியிட்டிருக்கும் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணியால் தனது 6 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தபோதும் ஒரு

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டு விருத்தி அடைந்து வருகின்ற ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான நேபாளம், இன்னும் ஒரேயொரு T20I போட்டியில் விளையாடுவதன் மூலம் T20I அணிகளுக்கான தரவரிசையில் இணையும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றது.

புதிய தரவரிசையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் முதலிடம் பெற்றமைக்கு அவர்கள் 2015/16, 2016/17 ஆம் ஆண்டுகளுக்கான பருவகாலங்களில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளின் போது, ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெற்ற நாடுகளுடன் சிறப்பான பதிவுகளை காட்டியதே காரணமாக அமைகின்றது.

ஒரு நாள் அணிகளுக்கான புதிய தரவரிசையில் நான்காம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் நியூசிலாந்து அணி, மூன்றாம் இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணியை விட ஒரு தரநிலைப் புள்ளி வித்தியாசத்தில் மொத்தமாக 112 தரநிலைப் புள்ளிகளுடன் இருக்கின்றது.

இவை தவிர 2019 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும் பத்து அணிகளில் ஏனைய அணிகளாக காணப்படும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் தங்களது இடங்களில் எந்தவித மாற்றங்களுமின்றி காணப்படுகின்ற போதிலும், அவைகளின் தரநிலைப்புள்ளிகளில் கணிசமான அளவு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றது.

இதன்படி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் நடப்பு சம்பியன்களான அவுஸ்திரேலியா, எட்டு தரநிலைப் புள்ளிகளை இழந்து மொத்தமாக 104 தரநிலைப் புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் காணப்படுவதோடு, 2017 ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி (106) ஆஸி அணியை விட இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ஆறாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி, புதிய ஒரு நாள் தரவரிசையின்படி மேலதிகமாக 06 தரநிலைப்புள்ளிகளையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில், பங்களாதேஷ் அணி மூன்று தரநிலைப் புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று மொத்தமாக 93 தரநிலைப் புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருப்பதுடன், 07 தரநிலைப் புள்ளிகளை இழந்த இலங்கை அணி (77) எட்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

இது தவிர 05 தரநிலைப் புள்ளிகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி (69) ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 05 மேலதிக தரநிலைப் புள்ளிகளுடன் மொத்தமாக 63 புள்ளிகளுடன் பத்தாம் இடத்திலும் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணி (130) முதலிடத்தில் இருக்கும் T20I போட்டிகளுக்கான தரவரிசையில், ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை பின்தள்ளி எட்டாம் இடத்தைப் பெற்றது மட்டுமே அணியொன்று தரநிலையில் இடம் மாறியதாகும். இதன்படி, T20I போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் முதல் ஏழு இடங்களுக்குள் இருக்கும் அணிகளுக்குள் எந்தவித தரநிலை மாற்றங்களும் இடம்பெறவில்லை.

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று(02) முதல் இடம்பெறும்

புதிய T20I தரவரிசையில் இரண்டாம் இடத்தில் தரநிலைப் புள்ளிகளில் எந்தவித மாற்றமும் இன்றி அவுஸ்திரேலிய அணி (126) இருப்பதோடு, இந்திய அணியினர் 02 தரநிலைப் புள்ளிகளைப் பெற்று மொத்தமாக 123  தரநிலைப்புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர்.

நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி (116) எந்தவித தரநிலைப்புள்ளிகளையும் இழக்காது இருப்பதோடு, மேலதிக தரநிலைப்புள்ளி ஒன்றுடன் இங்கிலாந்து (115) ஐந்தாம் இடத்தில் காணப்படுகின்றது.

இவை தவிர தலா 114 புள்ளிகள் வீதம் பெற்றிருக்கும் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளில் தசம புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் தென்னாபிரிக்க அணி ஆறாம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி ஏழாம் இடத்திலும் காணப்படுகின்றன.

T20I போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் ஆப்கான் எட்டாம் இடத்திலும், இலங்கை அணி ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகின்றன.  இலங்கை அணி 04 தரநிலைப் புள்ளிகளை இழந்ததே, ஆப்கானிஸ்தான் அணி எட்டாம் இடத்திற்கு முன்னேறியமைக்கு காரணமாகும்.  தற்போது ஒன்பதாம் இடத்தில் உள்ள இலங்கை அணி மொத்தமாக 85 தரநிலைப் புள்ளிகளுடன் இருப்பதுடன், ஆப்கானிஸ்தான் அணிக்கும் (87) இலங்கை அணிக்கும் இரண்டு புள்ளிகள் வித்தியாசமாக உள்ளது. ஆப்கான் அணியும் புதிய T20I தரவரிசையில் ஒரு தரநிலைப் புள்ளியை இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரநிலைப் புள்ளிகளில் இடம்பெற்ற மாற்றங்கள்

T20I போட்டிகளுக்கான அணிகளின் தரநிலைப் புள்ளிகளில் இடம்பெற்ற மாற்றங்கள்