T20i இல் தமது சொந்த உலக சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான்

98

சர்வதேச T20 அரங்கில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி  தொடர்ச்சியாக 12 வெற்றிகளை குவித்து, தங்களது உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது.  

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் டெஸ்ட் தொடரை நிறைவு செய்து தற்போது பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணியினுடைய பங்குபற்றுதலுடன் இடம்பெறும் முக்கோண T20i தொடரில் விளையாடி வருகிறது

பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு……

கடந்த வெள்ளிக்கிழமை (13) ஆரம்பமாகிய குறித்த T20i தொடரின் மூன்று போட்டிகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளன. மூன்று அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில்  ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.  

பங்களாதேஷ் அணியுடன் நேற்று (15) நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இவ்வாறு 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 12 T20i வெற்றிகளை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.   

சர்வதேச T20 அரங்கில் இதுவரையில் ஒரு அணி தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பெற்றதே சாதனையாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2016 மார்ச் தொடக்கம் 2017 மார்ச் வரையான காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு வெற்றி, ஐக்கிய அரபு இராச்சியத்துடன் 4 வெற்றிகள், அயர்லாந்து அணியுடன் 5 வெற்றிகள் மற்றும் ஓமான் அணியுடன் ஒரு வெற்றி என்றவாறு தொடர்ச்சியான 11 வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருந்து.  

தற்போது அதே ஆப்கானிஸ்தான் அணி கடந்த வருடம் (2018) பெப்ரவரி 5ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் (2019 செப்டம்பர் 15) T20i அரங்கில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்று தங்கள் சாதனையை முறியடித்துக்கொண்டுள்ளது.  

புதுமுக வீரர்களுடனான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு…..

அயர்லாந்து அணியுடன் 5 வெற்றிகள், ஜிம்பாப்வே அணியுடன் 3 வெற்றிகள் மற்றும் பங்களாதேஷ் அணியுடன் 4 வெற்றிகள் என்றவாறு தொடர்ச்சியான 12 வெற்றிகள் பெறப்பட்டு ஆப்கானிஸ்தான் அணியினால் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் தொடர்ச்சியான வெற்றிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T20i தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இறுதிப் போட்டி தவிர்ந்து இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அடுத்த போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.  

T20i அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்த அணிகள் 

  1. ஆப்கானிஸ்தான் 12 வெற்றிகள் (2018-19)
  2. ஆப்கானிஸ்தான் 11 வெற்றிகள் (2016-17)
  3. பாகிஸ்தான் 9 வெற்றிகள் (2018)
  4. இங்கிலாந்து 8 வெற்றிகள் (2010-11)
  5. அயர்லாந்து 8 வெற்றிகள் (2012)
  6. பாகிஸ்தான் 8 வெற்றிகள் (2018)
  7. தென்னாபிரிக்கா 7 வெற்றிகள் (2009)
  8. பாகிஸ்தான் 7 வெற்றிகள் (2009)
  9. இந்தியா 7 வெற்றிகள் (2012-14)
  10. இந்தியா 7 வெற்றிகள் (2016)

இலங்கை அணியானது T20i அரங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் (2 வெற்றி), பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றிருந்தது. இதுவே இலங்கை அணியின் அதிக தொடர்ச்சியான வெற்றிகளாகும்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<