Home Tamil ஓமானிடம் தோல்வியடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி

ஓமானிடம் தோல்வியடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி

85

பங்களாதேஷில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் ஓமான் அணியை எதிர்கொண்ட இலங்கை வளர்ந்து வரும் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷில் நடைபெறவுள்ள வளர்ந்து…..

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் வளர்ந்து வரும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லாவிட்டாலும், சிறந்த பங்களிப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.  

இதில் குறிப்பாக அஷேன் பண்டார 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அணித் தலைவர் சரித் அசலங்க 57 ஓட்டங்களை பெற்றார். இவர்களுக்கு அடுத்தப்படியாக பெதும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களையும், மினோத் பானுக 33 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

ஓமான் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, மொஹமட் சனுத் 3 விக்கெட்டுகளையும், ஜெய் ஒடேட்ரா 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஓமான் வளர்ந்து வரும் அணி 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அத்துடன், ஓமான் அணியின் ஓட்டவேகமும் அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

ஆனாலும், ஓமான் வளர்ந்து வரும் அணிக்காக விளையாடிய அனுபவ வீரரான ஜெட்டிந்தர் சிங் சதமடித்து அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளிக்க, சுராஜ் குமார் அரைச் சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இவர்கள் இருவரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஓமான் வளர்ந்து வரும் அணி 48.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஜெட்டிந்தர் சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி 131 ஓட்டங்களை குவிக்க, சுராஜ் குமார் 70 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணியின் பந்துவீச்சினை பொருத்தவரை அனுபவ வீரர் அமில அபோன்சோ 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணி வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் வளர்ந்து வரும் அணியை எதிர்வரும் 16ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Emerging Team
268/10 (50)

Oman
269/6 (48.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b Aqib Ilyas 40 62 1 2 64.52
Minod Bhanuka c Jatinder Singh b Jay Odedra 33 35 6 0 94.29
Kamindu Mendis c Mohammad Nadeem b M Sanuth 17 37 0 0 45.95
Charith Asalanka c Suraj Kumar b Jay Odedra 57 65 2 2 87.69
Sammu Ashan b M Sanuth 15 19 1 0 78.95
Ashen Bandara c Kaleemullah b M Sanuth 62 51 4 2 121.57
Jehan Daniel lbw b Kaleemullah 1 2 0 0 50.00
Ramesh Mendis c Jatinder Singh b Sandeep Goud 28 23 1 1 121.74
Kalana Perera run out (Aamir Kaleem) 5 4 0 0 125.00
Amila Aponso run out (M Sanuth) 1 1 0 0 100.00
Asitha Fernando not out 0 0 0 0 0.00


Extras 9 (b 1 , lb 0 , nb 1, w 7, pen 0)
Total 268/10 (50 Overs, RR: 5.36)
Fall of Wickets 1-58 (12.3) Minod Bhanuka, 2-86 (19.3) Pathum Nissanka, 3-112 (26.6) Kamindu Mendis, 4-143 (32.4) Sammu Ashan, 5-202 (40.2) Charith Asalanka, 6-206 (41.5) Jehan Daniel, 7-254 (48.1) Ashen Bandara, 8-264 (49.3) Kalana Perera, 9-267 (49.5) Ramesh Mendis, 10-268 (49.6) Amila Aponso,

Bowling O M R W Econ
Kaleemullah 9 1 57 1 6.33
Fayyaz Butt 5 0 36 0 7.20
Sandeep Goud 3 0 16 1 5.33
Jay Odedra 10 0 52 2 5.20
Aamir Kaleem 6 0 24 0 4.00
Aqib Ilyas 7 0 41 1 5.86
M Sanuth 10 1 41 3 4.10


Batsmen R B 4s 6s SR
M Sanuth b Kalana Perera 19 20 2 1 95.00
Jatinder Singh not out 131 150 13 1 87.33
Aqib Ilyas c Ashen Bandara b Amila Aponso 7 10 1 0 70.00
Aamir Kaleem b Amila Aponso 0 1 0 0 0.00
Mohammad Nadeem c Minod Bhanuka b Amila Aponso 10 22 1 0 45.45
Suraj Kumar c Amila Aponso b Asitha Fernando 70 77 4 3 90.91
Naseem Khushi run out (Ramesh Mendis) 21 10 1 2 210.00
Sandeep Goud not out 2 3 0 0 66.67


Extras 9 (b 1 , lb 2 , nb 0, w 6, pen 0)
Total 269/6 (48.5 Overs, RR: 5.51)
Fall of Wickets 1-42 (8.5) M Sanuth, 2-67 (13.2) Aqib Ilyas, 3-67 (13.3) Aamir Kaleem, 4-90 (19.2) Mohammad Nadeem, 5-238 (45.2) Suraj Kumar, 6-263 (47.3) Naseem Khushi,

Bowling O M R W Econ
Asitha Fernando 10 0 51 1 5.10
Kalana Perera 8 1 44 1 5.50
Amila Aponso 10 0 40 3 4.00
Jehan Daniel 4 0 31 0 7.75
Ramesh Mendis 8.5 0 46 0 5.41
Kamindu Mendis 8 0 54 0 6.75



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<