வளர்ந்துவரும் ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

76

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இவ்வருடம் நடைபெறவுள்ள நான்காவது பருவகாலத்திற்கான தொடர் அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் (ACC) கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடாத்தப்பட்டுவரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடரின் நான்காவது பருவகாலத்திற்கான தொடரானது இவ்வருடம் (2019) பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. 

பங்களாதேஷ் A அணிக்கு எதிராக சதம் கடந்த கமிந்து மெண்டிஸ்

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி……

இவ்வருடம் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தமாக எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன. குறித்த எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

குழுநிலை போட்டிகள் முடிவில் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இறுதியில் சம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும். 

அதன்படி குழு A இல் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், குழு B இல் இந்தியா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குறித்த தொடரானது அடுத்த மாதம் (நவம்பர்) 14 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பங்களாதேஷின் ஐந்து மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் குழுநிலை போட்டிகள் அனைத்தும் ஷேக் கமால் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொக்ஸ் பஸார் அகடமி, கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 3 ஆம் மைதானம், கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 4 ஆம் மைதானம் ஆகிய மைதானங்களிலும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகியன மிர்பூரில் அமைந்துள்ள ஷெரீ பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது. 

MCC இன் தலைவராக பொறுப்பேற்ற குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட….

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற மூன்றாவது வளர்ந்துவரும் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய இலங்கை வளர்ந்துவரும் அணி நடப்பு சம்பியனாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

தொடர் அட்டவணை 

14 நவம்பர்

  • இலங்கை எதிர் ஓமான் – கொக்ஸ் பஸார் அகடமி
  • பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் – ஷேக் கமால் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 3 ஆம் மைதானம்
  • பங்களாதேஷ் எதிர் ஹொங்கொங் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 4 ஆம் மைதானம்

16 நவம்பர் 

  • இலங்கை எதிர் பாகிஸ்;தான் – ஷேக் கமால் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • ஆப்கானிஸ்தான் எதிர் ஓமான் – கொக்ஸ் பஸார் அகடமி
  • இந்தியா எதிர் பங்களாதேஷ் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 3 ஆம் மைதானம்
  • ஹொங்கொங் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 4 ஆம் மைதானம்

க்ரைக் ப்ரத்வைட்டின் பந்துவீச்சி விதிமுறைக்கு உட்பட்டது என தீர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் பகுதிநேர…..

18 நவம்பர் 

  • இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் – கொக்ஸ் பஸார் அகடமி
  • பாகிஸ்தான் எதிர் ஓமான் – ஷேக் கமால் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • இந்தியா எதிர் ஹொங்கொங் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 4 ஆம் மைதானம்
  • பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் 3 ஆம் மைதானம்

20 நவம்பர் 

  • முதல் அரையிறுதி – ஷெரீ பங்களா தேசிய கிரிக்கெட் மைதானம் 

21 நவம்பர் 

  • இரண்டாவது அரையிறுதி – ஷெரீ பங்களா தேசிய கிரிக்கெட் மைதானம் 

23 நவம்பர்

  • இறுதிப்போட்டி – ஷெரீ பங்களா தேசிய கிரிக்கெட் மைதானம் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<