இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயர்

226

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பெயரை ‘ஸ்ரீலங்கா மெய்வல்லுனர்’  என மாற்றம் செய்வதற்கான முன்மொழிவை அதன் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த விளையாட்டு சங்கங்களில் ஒன்றாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் 1921ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்

உலக மெய்வல்லுனர் விளையாட்டின்…………

எனினும், 2002ஆம் ஆண்டு வரை இலங்கை அமெச்சர் மெய்வல்லுனர் சங்கம் என்ற பெயரால் அது அழைக்கப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும், இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டானது 1896ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்தாலும், 1921ஆம் ஆண்டுதான் அது உத்தியோகபூர்வமாக சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சங்கமாக மாறியது

அத்துடன், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஆரம்ப ஸ்தாபகர்களாக கேர்னல் டி. ரைட் மற்றும் ரொபட் கெமென் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்

எனினும், ஆரம்ப காலத்தில் லங்கா மெய்வல்லுனர் விளையாட்டு சங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன

இதன்படி, சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன

அண்மைக்காலமாக வெற்றிடமாக இருந்து ……..

எனவே, ஸ்ரீலங்கா மெய்வல்லுனர் என்ற பெயரானது நிறைவேற்றுக் குழு கூட்டதின் போது முன்மொழியப்பட்டத்தை அடுத்து அதை உத்தியோகபூர்வ பெயராக ஏற்றுக்கொள்வதற்காக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்

இதேவேளை, 1912ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பெயரும் இவ்வருடம் உலக மெய்வல்லுனர் (World Athletics) என மாற்றம் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

அதேபோல, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என அழைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயர் 2002ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் என மாற்றம் செய்யப்பட்டது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<