ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி

74

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் காலை நேர மோதல்கள் மியானி கூடைப்பந்து அரங்கிலும், கிழக்குப் பல்கலைக்கழக கூடைப்பந்து அரங்கிலும் இன்று (25) நடைபெற்றிருந்தன.  

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

52 ஆவது சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து (Senior Nationals) …

இதில் முதல் மோதலில் கண்டி மாவட்ட ஆண்கள் அணி, இலங்கை பல்கலைக்கழக இணைப்பு ஆண்கள் அணியினை எதிர்கொண்டிருந்தது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயற்பட்ட கண்டி வீரர்கள், இலங்கை பல்கலைக்கழக இணைப்பு அணியினை 61-52 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தனர். 

இதன் பின்னர், அனுராதபுர மாவட்ட ஆண்கள் அணியினர் காலி மாவட்ட ஆண்கள் அணியினர் விளையாடிய போட்டியில், அனுராதபுர அணி காலி வீரர்களை 63-61 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. அனுராதபுர அணியிடம் தோல்வியடைந்த காலி வீரர்கள் தொடரில் இரண்டாவது தோல்வியினைப் பதிவு செய்தனர். 

அதேநேரம் கண்டி மாவட்ட பெண்கள் பிரிவு அணி, மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பிரிவு அணியுடன் பின்னர் மோதியது. இந்த மோதலில், மட்டக்களப்பு மாவட்ட வீராங்கனைகள் கண்டி பெண்கள் பிரிவு அணி மூலம் 94-61 என 33 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் நாளில் மாத்தறை மாவட்ட பெண்கள் அணி மற்றும் பொலன்னறுவை பெண்கள் பிரிவு அணி பங்கேற்க இருந்த போட்டி மாத்தறை மாவட்ட பெண்கள் தரப்பு தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தினால் கைவிடப்பட்டது. எனவே, போட்டியின் வெற்றியாளர்களாக பொலன்னறுவை மாவட்ட பெண்கள் அணி மாறிக்கொண்டது. 

சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<