வரலாற்று வெற்றியுடன் தங்கத்தை தமதாக்கிய வட மாகாண உதைபந்து அணி

212
Northern province 2019

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டு அரங்கில் இடம்பெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமான உதைபந்தாட்ட தொடரின்  இறுதிப் போட்டியில் தென் மாகாண அணியினை 4:0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்ட வட மாகாண அணியினர், வடக்கிற்கு உதைபந்தாட்டத்தில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொடுத்து வரலாறு படைத்துள்ளனர். 

இறுதிப் போட்டி 

தொடர் முழுவதுமாக தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய வட மாகாண அணியினர் இறுதிப் போட்டியில், அணியின் தலைவர் ஞானரூபன் வினோத் மூலமாக முதலாவது கோலினை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேசிய அணி வீரர் நிதர்சன் ஒரு கோலியை பெற்றுக்கொடுக்க முதற் பாதி ஆட்டத்தின் நிறைவில் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றனர் வட மாகாண வீரர்கள்.  

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் அனித்தா, ஆஷிக்குக்கு தங்கம்; சண்முகேஸ்வரனுக்கு இரண்டாமிடம்

தேசிய விளையாட்டு பெரு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான இன்று (25)..

இரண்டாவது பாதியாட்டத்தின் போதும் இலங்கை தேசிய அணியிலிருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் வீரரான ஞானரூபன் மேலும் இரண்டு கோல்களினை பெற்றுக்கொடுத்து தனது ஹெட்ரிக்கினை பதிவு செய்தார். இதன்மூலம் வட மாகாண அணி 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கால்பந்து போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை தமதாக்கியது.

இறுதிப் போட்டி வரையிலான பயணம் 

தொடரின் முதலாவது போட்டியில் மேல் மாகாண அணியினை எதிர்கொண்ட வட மாகாண அணியினர் 7:1 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றனர்

குறித்த போட்டியில் ஞானரூபன் 3 கோல்களையும், இளைய வீரரான சாந்தன் 2 கோல்களையும் கலிஸ்ரர் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.   

அரையிறுதி போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியினை எதிர்கொண்ட வட மாகாண வீரர்கள் ஞானரூபன் மற்றும் பிறேம்குமாரின் கோல்களுடன் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் தடம்பதித்திருந்தனர்

ஞானரூபன் அசத்தல் 

இலங்கையில் தேசிய அணியில் கடந்த சில வருடங்களில் மத்திய, முன் களத்தில் முக்கியமான வீரராக திகழ்ந்தவரும், தற்போது சொலிட் மற்றும் யங் ஹென்றீசியன்ஸ் அணிகளுக்காக விளையாடி வரும் வீரருமான செபமாலைநாயகம் ஞானரூபன் இந்த தொடரில் வட மாகாண அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்

Photos: 45th National Sports Festival – Day 02

ThePapare.com | Sithija De Silva | 27/10/2019 Editing and re-using images without…

தொடரில் இறுதிப்போட்டி உட்பட இரண்டு போட்டிகளில் ஹெட்றிக் கோல்களினை போட்டதுடன், மூன்று போட்டிகளில் 7 கோல்களினை பெற்றுக்கொடுத்த முப்பது வயதான மத்திய கள வீரரின் பங்கு வட மாகாண அணி கிண்ணம் வெல்வதில் மிக முக்கியமானதாகும்

இலங்கையின் முதல்தர உதைப்பந்தாட்ட தொடரில் எந்தவொரு அணியினையும் கொண்டிருக்காத வட மாகாணம், தேசிய விளையாட்டு விழாவில் ஏனைய மாகாண அணிகளினை வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தினை பெற்றிருப்பது வடக்கின் உதைபந்தாட்ட ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டு விழா உதைப்பந்தாட்டத்தில் வட மாகாணம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தங்கப் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அணி விபரம் 

வட மாகாண அணியினை முன்னாள் தேசிய அணி வீரர் ஞானரூபன் வழி நடத்தியதுடன், இவருக்கு துணையாக ஐயனார் அணியின் அகீபன் செயற்பட்டிருந்தார். தேசிய அணி வீரர்களான டக்சன் பியூஸ்லஸ், யூட் சுமன், நிதர்சன் ஆகியோரும் முன்னாள் தேசிய அணி வீரரான எடிசன் பிகுராடோவும் இவ்வணியில் இடம்பிடித்யிருந்தனர்.   

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை…

அனுபவ வீரர்களான பிறேம்குமார், கலிஸ்ரர் இணை முன் களத்திற்கு பலம் சேர்க்க ஜெயராஜ், கஜகோபன் இணை பின் களத்திற்கு வலுச்சேர்த்தனர்

பாடசாலை தொடர்களில் பிரகாசித்தவர்களான இளைய வீரர்கள் அமல்ராஜ், சாந்தன், தில்லைகாந்தன் மற்றும்  சஜீபன் ஆகியோரும் இந்த பெருமைக்குறிய குழாத்தில் இடம்பிடித்திருந்தனர்.  

அமல்ராஜ், சஜீபன் இணையுடன் இனியவனும் கோல் காப்பாளர்களாக அணியில் இடம்பிடித்திருந்தார். அதேவேளை கிறிஷாந்தன், கிசாந்தன், தனுஜன் மற்றும் ஜோய்சகன் ஆகிய வீரர்களும் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்

அணியின் பயிற்றுவிப்பாளராக பாலகிருஷ்ணன் முகுந்தன் செயற்பட்டிருந்தார்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<