ஆசிய கரப்பந்தாட்டம்: முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வி

503

23 வயதுக்கு உட்பட் மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி நேற்று (03) மியன்மாரில் ஆரம்பமானது. இதில் தனது முதல் போட்டியில் பலம்மிக்க அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி 3-0 என தோல்வியை சந்தித்தது. 

A குழுவில் ஆடும் இலங்கை அணி போட்டியை நடத்தும் மியன்மார், பலம்மிக்க அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் அணிகளுடனேயே போட்டியிடுகிறது.

அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்திரேலியாவுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட இலங்கை வீரர்கள் 25 புள்ளிகளுக்கு மேல் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் கடைசி வரை நீடித்த கடும் போட்டிக்குப் பின் இலங்கை வீரர்கள் 29-27 என்ற புள்ளிகளால் முதல் சுற்றை இழந்தனர். 

உள்ளூர் மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்….

இலங்கை வீரர்களிடம் முதல் சுற்றில் இருந்த உற்சாகம் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் காணமுடியவில்லை. இதனால் அந்த இரண்டு சுற்றுகளிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு போட்டி ஒன்றை வெளிப்படுத்த அவர்களால் முடியாமல்போனது. இதனால் இரண்டாவது சுற்றிலும் 25-17 என்ற புள்ளிகளால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.   

போட்டியின் மூன்றாவது சுற்றில் இலங்கை வீரர்கள் அதிக களைப்பு அடைந்திருப்பதை காணமுடிந்தது. அந்த சுற்றில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா 27-14 என்று புள்ளிகளால் இலகுவாக வெற்றியீட்டியது.  

இலங்கை வீரர்கள் இன்று (04) போட்டியை நடத்தும் மியன்மார் அணியை எதிர்கொள்ளவுள்ளனர். ThePapare.com இந்தத் தொடரின் அனைத்து போட்டி முடிவுகளையும் தருவதற்கு தயாராக உள்ளது. விளையாட்டின் முதன்மையானவர்களான எம்முடன் இணைந்திருங்கள். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<