ஆசிய இளையோர் பெட்மின்டன் போட்டிகளுக்கான இலங்கை வீரர்கள் தெரிவு

221
32 member Sri Lanka contingent for Asia Junior Badminton

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 17 மற்றும் 15 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கான 32 வீர, வீராங்கனைகளை கொண்ட குழுவொன்றை இலங்கை பெட்மின்டன் சம்மேளனம் தெரிவு செய்துள்ளது.

இச்சம்பியன்ஷிப் போட்டிகளை, 40 நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ‘ஆசிய பெட்மின்டன் கூட்டமைப்பு’ ஒழுங்கு செய்திருக்கின்றது. ஆசிய பெட்மின்டன் கூட்டமைப்பு நடாத்துகின்ற 5 முக்கியமான போட்டிகளில் ஒன்றாக, ஆசிய இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டிகலும் இருக்கின்றன. அந்த வகையில், இம்முறை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளிலும் மொத்தமாக 10 நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

ஆசியாவிலிருந்து மொத்தமாக 288 வீர, வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இப்போட்டித் தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 32 வீர, வீராங்கனைகள் பங்கொள்கின்றனர்.

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும், இலங்கை பெட்மின்டன் சம்மேளன அதிகாரிகளினால் மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னரே இந்த சம்பியன்ஷிப் சுற்றுக்காக இறுதிப் பெயர் விபரம் உறுதி செய்யப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் உத்தியோகப்பூர்வ பயிற்சியாளர்களாக துமிந்த நிரோஷன் சில்வா, கிரிஷாந்த கொடஹேவா மற்றும் யோஷியுகி நாகமுற ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய பெட்மின்டன் சம்பியன்ஷிப்  போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட தேசிய இளையோர் அணி விபரம்

ஆடவர் குழு

1. ராடித் நிலன
2.ரசிந்து தேனுஜ
3. திசும தீகயு
4. துமிந்த வர்ணக
5.வெனுர மொவின்
6. லோசன ஒஷான
7. சமத் கவிந்த டயஸ்
8. சிரத் சந்துஷ்
9. லக்ஷன் மெண்டிஸ்
10. பிரவீன் பானுக
11லகிந்து யேஸவின்
12. வினு ரன்சிக
13.கவின் துல்சித் மொரகொட
14. ஜெமீன் ஷேஷான
15. சனிரு பினெத்
16. செவ்மின குணதிலக

மகளிர் குழு

1. சுவாணி முதுமாலி
2.சதுலி இஷாரா
3.அமாலி பபஸரா
4. மஹேஷா கீத்மி
5. மெதாலி மேவன்க அபேநாயக
6. ஜனனுவனி அமெண்டா டீ அல்விஸ்
7.ஐஸ்வர்யா ரவிசந்திரன்
8.விதாரா சுஹாஸ்னி
9. சசினி ஹன்சமாலி
10. டிமாலி பிரேமெஷிகா டயஸ்
11. ஹாசினி நுசக
12. கயன ஸமதி
13. நிலசி சியாரா பாலசூரிய
14. சிதுமி குருசிங்க
15. ஏஹினி வொனரா
16. அனுரங்கி ஹன்சமாலி