திலகரத்ன சம்பத்தின் அபாரத்தால் மாஸ் ஹோல்டிங்ஸ் இறுதிப்போட்டிக்கு

82

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் டி20 தொடரில் சகலதுறை வீரரான திலகரத்ன சம்பத்தின் அதிரடி ஆட்டத்தால் மாஸ் ஹோல்டிங்ஸ் அணி, டிமோ அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் ஹோல்டிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டிமோ அணி, திக்ஷில டி சில்வாவின் அரைச்சதத்தின் (51) உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கமிந்து மெண்டிஸின் அரைச்சதத்தால் மாஸ் ஹோல்டிங்ஸ் வெற்றி

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு…

பந்துவீச்சில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான தம்மிக பிரசாத் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

Photos: Dimo vs MAS Unichela | 1st Semi-Final | 27th-Singer MCA T20

மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய திலகரத்ன சம்பத் 77 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்த்தார். 

இதன்படி, 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 

போட்டியின் சுருக்கம்

டிமோ – 168/9 (20) – திக்ஷில டி சில்வா 51, தம்மிக பிரசாத் 4/31, நுவன் துஷார 2/23, வனிந்து ஹஸரங்க 2/34

மாஸ் ஹோல்டிங்ஸ் – 169/5 (19.4) – திலகரத்ன சம்பத் 77, டிலேஷ் குணரத்ன 2/25

முடிவு – மாஸ் ஹோல்டிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<