கமிந்து மெண்டிஸின் அரைச்சதத்தால் மாஸ் ஹோல்டிங்ஸ் வெற்றி

74

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (23) நடைபெற்றன.

இதில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் அரைச் சதமடித்து அசத்தியிருந்தார்.

ஹேலீஸ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு மற்றும் சதுரங்க

ஜோன் கீல்ஸ் அணிக்கு எதிரான………..

A குழுவுக்காக MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் LB பினான்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற LB பினான்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி, கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் தாண்டி பெற்றுக் கொண்ட 87 ஓட்டங்களின் உதவியோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

LB பினான்ஸ் அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரஜீவ வீரசிங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

226 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய LB பினான்ஸ் அணி, 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 83 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அந்த அணிக்காக சதுரங்க குமார 39 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, பந்துவீச்சில் அநுக் பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும், தம்மிக பிரசாத் மற்றும் திலகரத்ன டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் – 225/8 (20) – கமிந்து மெண்டிஸ் 87, மஹேல உடவத்த 47, திலகரத்ன டில்ஷான் 24, அசித பெர்னாண்டோ 3/37, ரஜீவ வீரசிங்க 2/33, சரித் அசலங்க 2/50

LB பினான்ஸ் – 142 (17.1) – சதுரங்க குமார 39, அசித பெர்னாண்டோ 27, அநுக் பெர்னாண்டோ 3/09, தம்மிக்க பிரசாத் 2/16, திலகரத்ன டில்ஷான் 2/21

முடிவு – மாஸ் ஹோல்டிங்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி


டிமோ எதிர் இலங்கை வளர்ந்துவரும் அணி 

MCA மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் டிமோ மற்றும் இலங்கை வளர்ந்தும்வரும் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டிமோ அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. 

இளையோர் உலகக் கிண்ண காலிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும்…………

இதில் சரித் குமாரசிங்க 38 ஓட்டங்களை அதிகபட்மாக எடுக்க, இலங்கை வளர்ந்துவரும் அணி சார்பாக ஹிமேஷ் ராமநாயக்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை வளர்ந்துவரும் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன்படி, 35 ஓட்டங்களால் டிமோ அணி வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

டிமோ – 181 (19.5) – சரித் குமாரசிங்க 38, புலின தரங்க 26, நிசல தாரக்க 21, ஹிமேஷ் ராமநாயக்க 3/19, கேஷான் விஜேரத்ன 2/27, தனஞ்சய லக்ஷான் 2/22

இலங்கை வளர்ந்துவரும் அணி – 146 (19.5) – சங்கீத் குரே 39, ஜனித் லியனகே 27, நிசல தாரக்க 3/36, திக்ஷில டி சில்வா 2/20, கவிஷ்க அன்ஜுல 2/25, புலின தரங்க 2/16

முடிவு – டிமோ அணி 35 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<