அதிரடி பந்துவீச்சினை வெளிப்படுத்திய மொஹமட் சிராஸ்

113

வர்த்தக நிறுவனங்கள் இடையே 27ஆவது தடவையாக நடைபெறும் சிங்கர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (10) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

ஜோன் கீல்ஸ் எதிர் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி 

கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ஜோன் கீல்ஸ் அணி இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியினை டக்வெத் லூயிஸ் முறையில் 48  ஓட்டங்களால் தோற்கடித்தது. 

நியூஸிலாந்தின் வெற்றியை சுப்பர் ஓவரில் தட்டிப் பறித்த இங்கிலாந்து

நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுப்பர்…..

இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் ஆட்டம் அணிக்கு 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பமானது. போட்டியின் முதலில் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் கிரிக்கெட் அணி 37 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் குவித்துக் கொண்டது. ஜோன் கீல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ அரைச்சதம் ஒன்றுடன் 50 ஓட்டங்களை குவித்து தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக மாறியிருந்தார். 

மறுமுனையில் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லக்ஷான் கமகே, நவீன் பெர்னாந்து மற்றும் துனித் வெல்லால்கே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Photos: John Keells vs SL-U19 | 27th Singer-MCA Premier League 2020 – Knock-Out stage

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஓட்டங்களை அடைய பதிலுக்கு இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியினர் துடுப்பாடிய போதிலும் அவர்களால் சீரற்ற காலநிலை காரணமாக 32 ஓவர்களை மட்டுமே எதிர்கொள்ள முடியுமாக இருந்ததுடன், போட்டியும் அத்துடன் நிறைவுக்கு வந்தது. 

போட்டி நிறைவுக்கு வர டக்வெத் லூயிஸ் முறையில் 32 ஓவர்களுக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும், 32 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்கள் மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் செரோன் பொன்சேக்கா 27 ஓட்டங்கள் குவிக்க, அசத்தலான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் 4 விக்கெட்டுக்களை ஜோன் கீல்ஸ் அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் – 182/9 (37) பானுக்க ராஜபக்ஷ 50, லக்ஷான் கமகே 2/07, நவீன் பெர்னாந்து 2/28, துனித் வெல்லால்கே 2/35

இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி – 114/8 (32) செரோன் பொன்சேக்கா 27, மொஹமட் சிராஸ் 4/14

முடிவு – ஜோன் கீல்ஸ் டக்வெத் லூயிஸ் முறையில் 48 ஓட்டங்களால் வெற்றி 


ஹேய்லிஸ் எதிர் மாஸ் யுனிச்செலா

கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் மாஸ் யுனிச்செலா கிரிக்கெட் அணி ஹேய்லிஸ் நிறுவன அணியினை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது. 

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹேய்லிஸ் நிறுவன கிரிக்கெட் அணி 36.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

ஹேய்லிஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கவிந்து குலசேகர 34 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். 

ஐ.சி.சி. இற்கு மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளும் எதிர்ப்பா?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தமது எதிர்கால போட்டி….

இதேநேரம், மாஸ் யுனிச்செலாவின் பந்துவீச்சு சார்பில் லஹிரு ஜயரத்ன மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 146 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மாஸ் யுனிச்செலா கிரிக்கெட் அணி குறித்த வெற்றி இலக்கினை 26.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. 

Photos: Hayleys vs MAS Unichela | 27th Singer-MCA Premier League 2020 – Knock-Out stage

மாஸ் யுனிச்செலா அணியின் வெற்றியினை தேசிய கிரிக்கெட் அணி வீரரான வனிது ஹஸரங்க அரைச்சதம் பெற்று ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களுடன் உறுதி செய்திருந்தார்.  

ஹேய்லிஸ் நிறுவன அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாந்து மற்றும் லஹிரு சமரக்கோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் சுருக்கம்

ஹேய்லிஸ் – 145 (36.3) கவிந்து குலசேகர 34, லஹிரு ஜயரத்ன 3/23, தில்ருவான் பெரேரா 3/30

மாஸ் யுனிச்செலா – 146/6 (26.3) வனிது ஹஸரங்க 64*, பினுர பெர்னாந்து 34/2, லஹிரு சமரக்கோன் 3/60 

முடிவு – மாஸ் யுனிச்செலா 4 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<