74 ஓட்டங்களுக்கு சுருண்டது கம்பஹா பண்டாரநாயக கல்லூரி

125

சிங்கர் அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிசன் 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், இன்று கேகாலை புனித மரியார் கல்லூரி மற்றும் பண்டாரநயக கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாகியது.

புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித மரியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களம் இறங்கியது. இதன்படி புனித மரியார் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்க்களைப் பெற்றது. புனித மரியார் கல்லூரி சார்பாக அகலங்க தினேஷ் 24 ஓட்டங்களையும் சுஜித் குமார 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பண்டாரநயக கல்லூரி சார்பாக ஜனிது வத்சல 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் தினுஷ்க இமேஷ் 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அறோஷ மதுஷான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஹசித்த திமல் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது. பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக ஜனிது வத்சல 42 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித மரியார் கல்லூரி சார்பாக சுபுன் குமார 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அகலங்க தினேஷ் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சஜீவ ஜயமால் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நிம்னக ஜயதிலக 13 விக்கெட்டுகள்; இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த புனித அந்தோனியார்

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித மரியார் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. புனித மரியார் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சுபுன் குமார ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார். பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக பந்து வீச்சில் தினுஷ்க இமேஷ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஜனிது வத்சல 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஹசித திமால் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

புனித மரியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 109 (43.1) – அகலங்க தினேஷ் 24, சுஜித் குமார 23, ஜனிது வத்சல 3/24, தினுஷ்க இமேஷ் 2/03, அறோஷ மதுஷான் 2/14, ஹசித திமால் 2/19  

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 74 (29.3) – ஜனிது வத்சல 42, சுபுன் குமார 4/22, அகலங்க தினேஷ் 2/06, சஜீவ ஜயமால் 2/19  

புனித மரியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66/6 (22) – சுபுன் குமார 21*, தினுஷ்க இமேஷ் 2/05, ஜனிது வத்சல 2/14, ஹசித திமால் 2/20