U-17 பெண்கள் கால்பந்து உலகக் கிண்ணம் இந்தியாவில்

91
©FIFA official Twitter

சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் (பிஃபா) நடத்தப்படுகின்ற ஏழாவது 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்தியாவில் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

அடுத்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடத்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன.  

பென்சமா, லுவிஸ் சுவாரெஸ் ஆகியோரின் இரட்டை கோலுடன் ரியல் மெட்ரிட், பார்சிலோனா வெற்றி

ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய சில ………

எனினும், போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற பிஃபாவின் விசேட கூட்டத்தின் போது இந்தியாவுக்கு வழங்குவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா ஆண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண கால்பந்து போட்டியை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்க பிஃபாவின் ஏற்பாட்டுக் குழு ஆலோசனை நடத்தியது. சுரிச் நகரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டது.   

இதன்படி, அடுத்த வருடம் நவம்பர் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், எந்தெந்த இடங்களில் போட்டிகள்  நடைபெறும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், புவனேஸ்வரில் உள்ள காலிங்கா மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதியை பிஃபா ஏற்கனவே வழங்கியிருந்தது

நோர்விச் சிட்டியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த மென்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில ……

இதுஇவ்வாறிருக்க, கொல்கத்தா, அஹமதாபாத், கோவா, நவி மும்பை ஆகிய இடங்களை பிஃபா அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர் என்று தொடருக்கான இயக்குனர் ரோமா கன்னா தெரிவித்துள்ளார். அத்துடன், இதில் மூன்று நகரங்களுக்கான அனுமதியை பிஃபா அதிகாரிகள் விரைவில் வழங்குவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இதன்படி, இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதில் நடப்புச் சம்பியன் ஸ்பெய்னுடன், போட்டிகளை நடாத்தும் இந்தியா அணியும் இப்போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும். மற்றைய அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன

இதுவரை இடம்பெற்றுள்ள, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் வரலாற்றில் வட கொரியா அணி 2008 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சம்பியனாகத் தெரிவாகியது. அதேபோல, தென் கொரியா 2010இலும், ஜப்பான் 2014இலும் சம்பியனங்களாகத் தெரிவாகின. இதுதவிர, ஆசிய நாடல்லாத பிரான்ஸ் 2012இலும், ஸ்பெய்ன் 2018இலும் சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<