ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோசியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

557
Getty Images

குரோசியாவிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி இம்முறை உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. மறுபுறம் குரோசிய அணி தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்

ஈரானின் பாதுகாப்பு அரணை மீறி தியாகோ கொஸ்டா..

உலகக் கிண்ணத்தில் ஆடும் மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்துடனான முதல் போட்டியை சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீன அணி தற்போது D குழுவில் ஒரு புள்ளியுடன் உள்ளது. இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை (26) நடைபெறவிருக்கும் கடைசி குழுநிலை போட்டியில் ஆர்ஜன்டீன அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதோடு அந்த குழுவில் உள்ள ஏனைய போட்டிகளின் முடிவுகளும் அந்த அணிக்கு சாதகமாக இருந்தாலேயே ஆர்ஜன்டீனாவால் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.     

கடைசியாக 1962 ஆம் ஆண்டிலேயே ஆர்ஜன்டீன அணி குழுநிலை போட்டிகளுடன் உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

நிஸ்னி நொவ்கிரோட் அரங்கில் ரஷ்ய நேரப்படி வியாழக்கிழமை (21) நடைபெற்ற போட்டியின் முதல் கால் மணி நேரத்தில் ஆர்ஜன்டீனா கோல் பெறும் வாய்ப்புகளை தவறவிட்டது. 13 ஆவது நிமிடத்தில் மக்சிமில்லியானோ மேசா அடித்த பிரீ கிக் குரோசிய பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் என்சொ பெரெஸ் ஆர்ஜன்டீனாவின் கோல் பெறும் வாய்ப்பொன்றை தவறவிட்டார்.  

முதல் பாதி: குரோஷியா 0 – 0 ஆர்ஜன்டீனா

எனினும் ஆர்ஜன்டீன கொல்காப்பாளர் வில்லி கபல்லேரோ செய்த மிகப்பெரிய தவறு குரோசிய அணி கோல் எண்ணிக்கையை ஆரம்பிக்க உதவியது. 53 ஆவது நிமிடத்தில் அவர் தேவையின்றி பந்தை உதைத்தபோது அது நேராக குரோசிய வீரர் அன்டே ரெபிக்கின் கால்களுக்கு செல்ல அவர் அதனை இலகுவாக கோலாக மாற்றினார்.

தொடர்ந்த 80 ஆவது நிமிடத்தில் லுகா மொட்ரிக் பந்து பறந்து வளைந்து செல்லும்படி உதைத்து குரோசியாவுக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்ததோடு போட்டி நிறுத்தப்படும் நேரத்தில் (90’+1) ஆர்ஜன்டீன தற்காப்பு அரணை இலகுவாக முறியடித்த குரோசிய வீரர்கள் இவான் ரகிடிக் மூலம் மூன்றாவது கோலை புகுத்தினர்.

காயத்தால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறிய நெய்மார்

வலது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக..

பார்சினோலா நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்த போட்டியில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதோடு ஆர்ஜன்டீன ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். போட்டியின் 64 ஆவது நிமிடம் வரை மெஸ்ஸியால் கோலை நோக்கி ஒரு உதை கூட செய்ய முடியவில்லை.  

1958 ஆம் ஆண்டு செகொஸ்லோவாக்கியாவிடம் 1-6 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்ற பின் ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண ஆரம்ப சுற்றில் பெற்ற மோசமான தோல்வி இதுவாகும்.

இதன்படி ரஷ்யா, உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு அடுத்து இம்முறை உலகக் கிண்ணத்தில் நான்காவது அணியாக குரோசியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.  

முழு நேரம்: குரோஷியா 3 – 0 ஆர்ஜன்டீனா

கோல் பெற்றவர்கள்

குரோஷியா  – அன்டே ரெபிக் 53′, லுகா மொட்ரிக் 80′, இவான் ரகிடிக் 90’+1

பேருவை வெளியேற்றிய பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்  

பேரு அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய பிரான்ஸ் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியதோடு 36 ஆண்டுகளுக்கு பின் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற பேரு அணி ஆரம்ப சுற்றுடனேயே நாடு திரும்பவுள்ளது.

எகடரின்பேர்க்கில் (Ekaterinburg), வியாழக்கிழமை (21) நடைபெற்ற C குழுவுக்கான போட்டியில் டென்மார்க்குடனான தனது முதல் ஆட்டத்தைப் போன்றே பேரு அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

எனினும் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ் ஆரம்பத்திலேயே கோல் புகுத்தி போட்டியில் முன்னிலை பெற்றுக்கொண்டது.

உலகக் கிண்ணத்தை வெற்றியின்றி ஆரம்பித்த பிரேசில்

பிஃபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில்…

34 ஆவது நிமிடத்தில் 19 வயது கைலியன் ம்பப்பே (Kylian MBAPPE) கோல்கம்பத்திற்கு அருகில் இருந்து எதிரணி கோல்காப்பாளரையும் தாண்டி வந்த பந்தை இலகுவாக வலைக்குள் செலுத்தினார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரரான அவர் 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் கடைசியாக உலகக் கிண்ணத்தை வென்றபோது பிறந்து கூட இருக்கவில்லை.

பிரான்ஸ் அணிக்காக உலகக் கிண்ணத்தில் கோல் பெற்ற வயது குறைந்த வீரராகவும் ம்பப்பே சாதனை படைத்தார்.   

முதல் பாதி: பிரான்ஸ் 1 – 0 பேரு

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பேரு அணி பதில் கோல் புகுத்துவதில் அவசரம் காட்டியதோடு அடிக்கடி பிரான்ஸ் கோல் எல்லையை ஆக்கிரமித்தது. அப்போது கோலை நோக்கி 10 உதைகள் மேற்கொண்ட பேரு பல கோனர் கிக்குகள் மற்றும் கோல் வாய்ப்புக் கொண்ட ப்ரீ கிக்குகளையும் பெற்றது.

எனினும் இரண்டாவது பாதியில் பிரான்ஸின் தற்காப்பு ஆட்டம் பலமாக இருந்தது. இதனால் கடைசி 45 நிமிடங்களும் கோலின்றியே முடிவடைந்தது.

இதன்படி C குழுவில் ஆறு புள்ளிகளுடன் பிரான்ஸ் நொக் அவுட் சுற்றுக்கு நுழைந்ததோடு பேரு அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று வெளியேறியது. இந்நிலையில் இந்த குழுவில் இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற டென்மார்க், அவுஸ்திரேலிய அணிகளிடையே போட்டி நிலவுகிறது. 4 புள்ளிகளுடன் இருக்கும் டென்மார்க்கிற்கு அதிக வாய்ப்புகள் இருந்தபோதும் அவுஸ்திரேலிய அணி தனது கடைசிப் போட்டியில் பேருவை வீழ்த்தி டென்மார்க் பிரான்ஸிடம் தோற்றால் அவுஸ்திரேலிய அணி முன்னேறிவிடும்.

எனினும் பிரான்ஸ் அணி 1982 மற்றும் 1986 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின் முதல் முறையாகவே அடுத்தடுத்த உலகக் கிண்ணங்களில் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முழு நேரம்: பிரான்ஸ் 1 – 0 பேரு

கோல் பெற்றவர்கள்

பிரான்ஸ் கைலியன் ம்பப்பே 34′

அவுஸ்திரேலியவுடனான போட்டியை சமநிலை செய்து அடுத்த சுற்றை நெருங்கும் டென்மார்க்

Getty Images

டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண போட்டி சமநிலையில் முடிந்ததை அடுத்த C குழுவில் டென்மார்க் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டிருப்பதோடு அவுஸ்திரேலியா தனது வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

சமராவில் இன்று (21) நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்திலேயே டென்மார்க் அணி கோல் புகுத்தியது. பெனால்டி எல்லைக்குள் வைத்து பந்தை பெற்ற நிகொலாய் ஜொர்கென்சன் நேர்த்தியாக கிறிஸ்டியன் எரிக்சனுக்கு தட்டிவிட்டார். அவர் அதனை எந்த தவறும் இன்றி வலைக்குள் புகுத்தினார்.

எனினும் 38 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியா போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. பெனால்டி எல்லைக்குள் மத்தியு லெக்கி பந்தை தலையால் முட்ட டென்மார்க்கின் யூசுப் போல்சன் தடுப்பதற்கு பாய்ந்தபோது அவரது கையில் பந்துபட்டது.

வீடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டு பரீட்சித்த பின் அவுஸ்திரேலியாவுக்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது. மில் ஜெடினாக் அதனை கோலாக மாற்றினார்.   

 >> காணொளிகளைப் பார்வையிட  

யூசுப் போல்சன் பேருவுடனான போட்டியிலும் எதிரணிக்கு பெனால்டி விட்டுக் கொடுக்க காரணமானார். இதன் மூலம் அவர் 2006 இல் செர்பியாவின் மிலான டுடிக்கிற்கு பின்னர் ஒரு உலகக் கிண்ண தொடரில் இரண்டு பெனால்டிகளை விட்டுக் கொடுத்தவராக பதிவானார்.

முதல் பாதி: டென்மார்க் 1 – 1 அவுஸ்திரேலியா

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் பெறும் சில வாய்ப்புகள் தவறிப்போயின. அவுஸ்திரேலியா கோலை நோக்கி 14 உதைகளை மேற்கொள்ளும்போது டென்மார்க் அணி 10 முயற்சிகளில் ஈடுபட்டது.  

இதன்படி C குழுவில் 4 புள்ளிகளை பெற்றிருக்கும் டென்மார்க் அணிக்கு பிரான்சுடன் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மறுபுறம் அவுஸ்திரேலிய அணி தனது கடைசி போட்டியில் பேருவை வீழ்த்துவது கட்டாயம் என்றபோதும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது ஏனைய போட்டிகளின் முடிவிலேயே தங்கியுள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய அணி கடந்த ஐந்து உலகக் கிண்ண போட்டிகளிலும் வெற்றி பெற்றதில்லை. இதன் மூலம் அந்த அணி அதிக போட்டிகள் வெற்றி பெறாமல் நீடிக்கும் அணியாகவும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

முழு நேரம்: டென்மார்க் 1 – 1 அவுஸ்திரேலியா

கோல் பெற்றவர்கள்

டென்மார்க் கிறிஸ்டியன் எரிக்சன் 7′

அவுஸ்திரேலியா மில் ஜெடினாக் 38 (பெனால்டி)

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…