ஐ.சி.சி இன் மூன்றாம் நிலை பயிற்றுவிப்பாளர் கல்வியில் ஹேரத் உட்பட 19 கிரிக்கெட் வீரர்கள்

314

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டின் கீழ், சர்வதேச கிரிக்கெட் சபை நடாத்தும் மூன்றாம் நிலை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாடநெறியில், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் 19 பேர் உட்பட 24 பேர் பங்குபற்றி வருகின்றனர்.

தென்னாபிரிக்கா செல்லவுள்ள இலங்கை மகளிர் அணி

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி…

சர்வதேச கிரிக்கெட் சபையின் பயற்றுவிப்பாளர் பாடநெறியை முன்னெடுக்கும் கல்வியாளர்களான ஷியாட் பர்க்கர், ஆஷ்லி ரோஸ் மற்றும் ரோலண்ட் லெபேப்வ் (Roland Lefebvre) ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து பயிற்றுவிப்பாளர் பாடநெறியை முன்னெடுத்து வருகின்றனர். இந்த பாடநெறிக்கான வசதிகளை இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்றுவிப்பாளர்களுக்கான தலைமை கல்வியாளர் ஹெஷான் டி மெல் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான  கல்வியாளர் தாரக்க சமரதுங்க ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் (06) கொழும்பு NCC கிரிக்கெட் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ள பயிற்றுவிப்பாளர்களுக்கான பாடநெறி எதிர்வரும் ஆறு நாட்களுக்கு நடைபெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைபெற்று வரும் மூன்றாம் நிலை பயிற்றுவிப்பாளர்களுக்கான பாடநெறியை, கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத் உட்பட தம்மிக்க பிரசாத், சாமர சில்வா, அஜந்த மெண்டிஸ், ரவீந்திர புஷ்பகுமார, சாமில கமகே, தர்ஷன கமகே, ஜெஹான் முபாரக், கயான் விஜயகோன், சஜீவ டி சில்வா, சஞ்சீவ வீரகோன், நிரோஷன் பண்டாரதிலக்க, சமன் ஜயந்த, முதுமுதலிகே புஷ்பகுமார, சச்சித்ர பத்திரன, திலின கந்தம்பி, மலிந்த வர்ணபுர மற்றும் இந்திக டி சில்வா ஆகியோர் கற்று வருகின்றனர்.

இலங்கையில் முதல் தடவையாக நடைபெற்று வரும் பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்றாம் நிலை பாடநெறி தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரி மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு வரும் அசங்க குருசிங்க குறிப்பிடுகையில்,

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 56

ஐ.சி.சியின் செவிப்புலனற்றோருக்கான உலக…

“இலங்கையில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாம், பயிற்றுவிப்பாளர் கல்விக்கான புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் எமது நாட்டில் சிறந்த கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை உருவாக்க முடியும் என நம்புகிறோம்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த மாத இறுதியில், இரண்டாம் நிலை பயிற்றுவிப்பாளர்களுக்கான பாடநெறிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<