வீரர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனாக் கல்லூரி

1030

யாழ் மண்ணில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிகள் பங்குபெறும் 18 ஆவதுவீரர்களின் சமர்கிரிக்கெட் பெரும் போட்டி (BIG MATCH) இன்று (23) கோலகலமாக ஆரம்பமாகியிருந்தது.  

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந் இரண்டு நாட்கள் கொண்ட இந்த வருடாந்த சமரின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மகாஜனாக் கல்லூரி அணியின் தலைவர் தயுஸ்டன் தங்கராசா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தாளிகளான ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர்களுக்கு கொடுத்திருந்தார்.

18ஆவது வீரர்களின் போரில் கிண்ணம் யாருக்கு?

வடக்கின் வளர்ந்துவரும் கிரிக்கெட்…

இதன்படி கனேஷமூர்த்தி நிகர்ஜன் மற்றும் ஸ்ரீரஞ்சன் டிலுக்ஷன் ஆகியோருடன் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆரம்பம் செய்திருந்தது.

தொடக்க வீரர்களில் ஒருவரான டிலுக்ஷனின் விக்கெட்டினை அவர் வெறும் 5 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றிருந்த நிலையில் மகாஜனாவின் வலதுகை சுழல் வீரரான சரூஜன் சுரேஷன் கைப்பற்றி மைதான சொந்தக்காரர்களுக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றினை வழங்கியிருந்தார்.

தொடர்ந்த போட்டியில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிகர்ஷன் புதிதாக ஆடுகளம்  நுழைந்த J. கலிஷ்டனுடன் இணைந்து போட்டியினை நகர்த்தினார். இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் ஸ்கந்தவரோதயா கல்லூரி இரண்டாம் விக்கெட்டினை பறிகொடுத்திருந்தது. மகாஜனாக் கல்லூரியின் தலைவர் தயுஸ்டனின் சுழலில் வீழ்ந்த கலிஷ்டன் 20 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.   

இதனையடுத்து சிறிது நேரத்தில் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் தலைவர் பாஸ்கரன் அஜிந்தனுடன் ஜோடி சேர்ந்திருந்த ஆரம்ப வீரர் நிகர்ஜனின் விக்கெட்டும் தயுஸ்டனின் சுழலில் வீழ்ந்தது. நம்பிக்கை தரும் விதமான ஒரு இன்னிங்சினை வெளிப்படுத்தியிருந்த நிகர்ஜன் 86 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

Photos: Mahajana College Cricket Team 2018 Preview

Photos of the Mahajana College Cricket Team 2018 Preview

இந்த விக்கெட்டினை அடுத்து சுன்னாகம் தரப்பின் மத்திய வரிசை மைதானத் சொந்தக்காரர்களின் (குறிப்பாக அணித் தலைவரின்) சுழலுக்கு தடம்புரளத் தொடங்கியிருந்தது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களில் சிவகுமார் பிரசான் தவிர வேறு எந்த வீரரும் 30 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.  

பிரசானோடு அணித்தலைவர் அஜிந்தனின் அரைச்சதமும் உதவ 69.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 233 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டது.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் அஜிந்தன் 5 பெளண்டரிகள் அடங்கலாக 120 பந்துகளுக்கு சதம் கடந்து 55 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, மகாஜனாக் கல்லூரியின் பந்துவீச்சில் தயுஸ்டன் 70 ஓட்டங்களுக்கு அபாரமாக 7 விக்கெட்டுக்களையும், சரூஜன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆட்டத்தின் முதல் நாளில் மகாஜனாக் கல்லூரி ஆரம்பித்திருந்தது.

மகாஜனாக் கல்லூரிக்காக ஆரம்ப வீரர்களாக பகீரதன் கிருஷான் மற்றும் ரவீந்திரன் தனிஷ்டன் ஆகியோர் வந்திருந்தனர். மெதுவான முறையில் ஓட்டங்கள் சேர்க்க தொடங்கியிருந்த மகாஜனாவின் முதல் விக்கெட் அவ்வணி 27 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது பறிபோயிருந்தது. செளந்தர்ராஜன் தன்சனின் பந்துவீச்சில் பிடிகொடுத்த தனுஷ்டன் வெறும் 2 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

Photos: Skandavarodaya College Cricket Team 2018 Preview

Photos of the Skandavarodaya College Cricket Team 2018 Preview

எனினும், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிருஷானின் பெறுமதியான இன்னிங்சோடு முதல் நாள் நிறைவில் மகாஜனாக் கல்லூரி 27 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களுடன் வலுவான நிலையொன்றில் முதல் இன்னிங்சில் காணப்படுகின்றது.

மகாஜனாக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் கட்டாயம் கிடைக்க வேண்டிய அரைச்சதம் ஒன்றினை தவறவிட்டிருந்த கிருஷான் 61 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

களத்தில் நதீஷன் தனுஷன் 33 ஓட்டங்களுடனும் மஹேஷ்வரன் பகீரதன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்  

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 233 (69.1) – பாஸ்கரன் அஜிந்தன் 55, கனேஷமூர்த்தி நிகர்ஜன் 38, தங்கராசா தயுஸ்டன் 70/7(19.1)

மகாஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 92/2 (27) – பகீரதன் கிருஷான் 46, மஹேஷ்வரன் பகீரதன் 33*

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்