ஸாஹிரா சுப்பர் 16 பாடசாலை கால்பந்தாட்ட தொடர் இம்மாதம்

533

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் 14வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள ”ஸாஹிரா சுப்பர் 16” பாடசாலை அணிகளுக்கு இடையிலான எழுவர் கொண்ட கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக் கிண்ணத்திற்காக ஹமீட் அல் ஹுஸைனி – ஸாஹிரா பலப்பரீட்சை

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் 80…

நாட்டின் சிறந்த 16 பாடசாலை கால்பந்து அணிகளை உள்ளடக்கியுள்ள இந்த போட்டித் தொடரின் ஊடாக இலங்கையின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தேடிக்கொடுக்கப்படுகிறது.  2030ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு, முன்னணி வீரர்களை இந்த தொடரின் மூலம் கண்டறிய முடியும் என ஏற்பாட்டுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில், ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அணிக்கு எழுவர் கொண்ட போட்டித் தொடராக இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இத்தொடருக்கான பிரதான அனுசரணையை வழங்க இம்முறையும் கூல் பிளேனட் நிறுவனம் (Cool Planet) முன்வந்துள்ளது.

இவர்களுடன் பல்வேறு நிறுவனங்களும், இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தங்களுடைய அனுசரணையை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன்படி தங்க அனுசரணையை டெகத்லோன் (Decathlon), வெள்ளி அணுசரணையை அமானா வங்கி (Amana Bank) மற்றும் மேவ் பிளவர் ஹோலிடேஸ் (May Flower Holidays) ஆகியவை வழங்க முன்வந்துள்ளதுடன், வெண்கல அனுசரணையை டேட் கிரவ்ண் நிறுனம் (Date Crown) வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் தொடருக்கான ஊடக பங்காளராக www.thepapare.com இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

இலங்கை மற்றும் மலேசிய தேசிய கால்பந்து …

போட்டித் தொடரில் பங்குபெறும் 16 அணிகளும், A, B, C மற்றும் D என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குழுநிலைகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முறையே கிண்ணம் மற்றும் தட்டுக்கான (Plate) காலிறுதிப் போட்டியில் விளையாடும்.  

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகள் போவ்லுக்காக (Bowl)அரையிறுதியில் மோதவேண்டும் என்பதுடன், நான்காவது இடத்தை பிடித்த அணிகள் கேடயத்துக்கான அரையிறுதிகளில் (Shield) விளையாடும். இதன்படி கிண்ணம், தட்டு, போவ்ல் மற்றும் கேடயம் ஆகிய பிரிவுகளின் அரையிறுதியில் வெற்றிபெறும் அணிகள், தங்களின் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இதேவேளை இம்முறை நடைபெறவிருக்கும் போட்டித் தொடரில் விளையாடவுள்ள பாடசாலை அணிகள் ஒவ்வொன்றுக்கும், தனியான அனுசரணை வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் மொட்ரிக்

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் …

பாடசாலை அணிகளும், அவற்றுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களும்

  • டி மசெனோட் கல்லூரி, கந்தானைட்ரைபெர்ஷ் (Drypers)
  • கேட்வே கல்லூரி, கொழும்பு பிரேண்ட் (A Brand)
  • இந்துக் கல்லூரி, கொழும்புஎஸ்.கே.பி. பேக் செண்டர் (SKP Bag Center)
  • இசிபத்தன கல்லூரிசிக்னேச்சர் (Signature)
  • லும்பினி கல்லூரிப்ரிண்ட் ஹவ்ஸ் (Print House)
  • லைசியம் சர்வதேசப் பாடசாலை – (Dacathlon)
  • மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்மிலன் சேர்மிக் (Milan Ceramic)
  • மாரிஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்புஎம்.எப்.ஸ்போர்ட்ஸ் (MA Sports)
  • நாலந்த கல்லூரி, கொழும்புமேவ் ப்ளெவர் ஹொலிடேஸ் (May Flower Holidays)  
  • றோயல் கல்லூரி, கொழும்புஅமானா வங்கி (Amana Bank)
  • புனித பெனடிக்ட் கல்லூரி.எப்.எல். (EFL)
  • புனித ஜோசப் கல்லூரிபுட்ஸால் வேர்ல்ட் (Futsal World)
  • புனித பேதுரு கல்லூரிஎச்.ஆர்.எம்.. (HRMI)
  • வெஸ்லி கல்லூரி கொழும்புயுனைடட் ட்ரெவல்ஸ் & டுவர்ஸ் (United Travels & Tours)
  • ஸாஹிரா கல்லூரி கம்பளைஎல்..எல்.சி. அல் பலாஹ் (LOLC Al Falah)
  • ஸாஹிரா கல்லூரி கொழும்புடேட் கிரவ்ண் (Date Crown)

குழு விபரம்

A குழுவெஸ்லி கல்லூரி, புனித பெனடிக் கல்லூரி, லைசியம் சர்வதேசப் பாடசாலை, இசிபத்தன கல்லூரி

B குழுஸாஹிரா கல்லூரி கொழும்பு, ஸாஹிரா கல்லூரி – கம்பளை, மாரிஸ்டெல்லா கல்லூரி, றோயல் கல்லூரி

C குழுமானிப்பாய் இந்துக் கல்லூரி, புனித பேதுருக் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, இந்துக் கல்லூரி கொழும்பு

D குழுலும்பினிக் கல்லூரி, கேட்வே கல்லூரி, டி மசெனோட் கல்லூரி, நாலந்த கல்லூரி

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…