SAG பளுதூக்கலில் யாழ். மங்கை ஆர்ஷிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம்

262

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கலில் பங்குகொண்ட வடக்கின் இரும்புப் பெண் என்றழைக்கப்படுகின்ற யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். 

பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆர்ஷிக்கா, ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் மற்றும் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 100 கிலோகிராம் உள்ளடங்கலாக 170 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் ……….

இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 98 கிலோ கிராம் எடையைத் தூக்கி நிலைநாட்டிய தேசிய சாதனையை இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் வைத்து ஆர்ஷிக்கா முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் தற்போதைய தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற ஆர்ஷிக்கா, அண்மையில் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் ஒரு தேசிய சாதனை, 2 போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

எனவே, பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா முதல்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச பதக்கமொன்றை வென்று சாதனை படைத்தார்.

ஆர்ஷிக்காவின் வெற்றிக்குப் பின்னால் எப்போதும் தூணாக இருந்து ஒரு அப்பாவாக, பயிற்சியாளராக, ஆசானாக அவரை தேசிய சம்பியனாகவும், தற்போது இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த வீராங்கனையாகவும் அவரைக் கொண்டு வருவதற்கு இரவுபகல் என்று அயராது பாடுபட்ட வட மாகாணத்தின் முன்னணி பளுதூக்கல் பயிற்சியாளரான விஜயபாஸ்கருக்கு இலங்கையின் முதல்தர இணையத்தளமான ThePapare.com வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

இதேநேரம், ஆர்ஷிக்கா பங்குகொண்ட போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், நோபாளம் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டது.

இதேநேரம், தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியின் இரண்டாவது நாளான இன்று (6) நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சதுரங்க லக்மால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.   

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<