மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடர் இவ்வார இறுதியில்

114

12 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ப்ளு என்ட் கோல்ட் (Blue & Gold) அழைப்பு கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

றோயல் கல்லூரி கரப்பந்தாட்ட ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் முகாமைத்துவப் பிரிவும், றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் (Royal College Union Volleyball Advisory and Management Committee – RCUVAMC) இப்போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

‘ஈவா’ அகில இலங்கை வலைப்பந்து தொடர் ஜூன் 30இல் ஆரம்பம்

மேல் மாகாண கூடைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பட்டில்…

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் 14, 16, 18 மற்றும் 20 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், மகளிர் பிரிவில் 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன், மேல் மாகணத்தைச் சேர்ந்த 50 பாடசாலைகளைச் சேர்ந்த சுமர் 100 அணிகள் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் ஆயத்தம் குறித்து றோயல் கல்லூரி கரப்பந்தாட்ட ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் தலைவர் நிர்மல சரத்சந்திர கருத்து வெளியிடுகையில்,

”பாடசாலைகளுக்கிடையில் சிறந்ததொரு போட்டித் தொடரொன்றை நடாத்தி தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தைப் பாடசாலை மட்டத்தில் பிரபல்யப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். 2005 ஆம் ஆண்டு முதல் தடவையாக இப்போட்டிகள் இடம்பெற்றதுடன், இதுவரை பல்வேறு வெற்றிகளையும், முன்னேற்றங்களையும் இத்தொடரின் மூலம் பெற்றுக்கொண்டோம். எனவே, இவ்வருடம் நாம் 12 ஆவது தடவையாக இந்தப் போட்டிகளை நடத்தவுள்ளோம்” என்றார்.

தேசிய மட்டத்தில் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கிய பெருமையைக் கொண்டுள்ள இப்போட்டித் தொடரில் வழமைபோன்று நாட்டின் முன்னணி நடுவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், வெற்றிபெறும் பாடசாலை, சிறந்த வீரர், சிறந்த பந்து பரிமாற்றுனர் உள்ளிட்ட பல விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இதேநேரம், இப்போட்டிகளில் முதல் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்பன 10 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<